கல்லூரி முடிந்துவிட்டது

கல்லூரி முடிந்துவிட்டது...
நான்கு வருடமிங்கு நகத்தளவு சுருங்கி விட்டது
நாளும் கிழமையும் நேரம்பார்த்து பழித்து விட்டது

கல்லூரி வாழ்வு கற்சிலையாகி விட்டது
கல்லூரியில் மிதந்த எங்கள் மூச்சும்
காலியாகி விட்டது..

வீடாய் இருந்த விடுதியும் விலக்கி விட்டது..
வீணாய் அதை நினைக்கையில் கண்ணீர் கன்னம் தொட்டது..

காதல் ஒன்று இடையில் கவனம் ஈர்த்தது..
அது புலவனை கொடுத்துவிட்டு புலம்பெயர்ந்தது..

வகுப்பில் பேரு படித்த நேரம் முடிவு பெற்றது
சோறு ருசித்த தருணம் கூட ஏப்பம் இட்டது..

கல்லூரி முடியும் போதுதான் அதன் அருமை புரிகிறது...
எங்களின் அடையாள அட்டையும் இனி செல்லாது என்பதும் தெரிகிறது..

நற்காலமாய் இருந்த அது இப்போ பொற்காலமாய் மாறிப் போனது..
அதெல்லாம் ஒரு காலம் என்று சொல்லும் அளவுக்கு நெஞ்சூறிப்போனது..

வானம்போல் விரிந்து வாழ்வு தந்தது..
வருங்காலத்திற்கும் அது கூட வந்தது..

ஆச பாசம் அனைத்தையும் அலையவிட்டது..
ஆயுசுக்கும் இந்த கல்லூரி எங்கள் மனதில் அழியாத வரம் பெற்றது..

கல்லூரி முடிந்துவிட்டது..
அது முடிவு தொட்டது..
-ஜாக்✍️

எழுதியவர் : ஜாக் (8-Apr-20, 4:25 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
பார்வை : 4657

மேலே