மங்கையே

மங்கையே..
உன்னை புகழ்ந்து போற்றுவதை நீ விரும்புவதில்லை..

நிலா, விண்மீண், பூ, தென்றல் என்று வினவுவதிலும் உனக்கு விருப்பமில்லை..

நதியாய், கடலாய், வானமாய்
வர்ணிப்பதிலும் உனக்கு வசந்தமில்லை..

கற்பனையாய் பொழிவதிலும் உனக்கு
கவனமில்லை..

நீ விரும்புவதெல்லாம் ஒன்றுதான்..

உன் பாரம் குறைய நினைக்கிறாய்..
உனக்கான பாதையில் நடக்க துடிக்கிறாய்..

உந்தன் இயல்பிலேயே இயங்க எண்ணுகிறாய்..

நீ யார் பிடியிலும் இருப்பதில்லை
நீ ஊர் மடியிலும் உறக்கம் பிடிப்பதில்லை
உன் மடியில் உறங்குபவரை எழுப்ப நினைப்பதில்லை..
உன் கொடியில் பூப்பதை கொடுக்காமல் விடுவதில்லை..

நீ ஒன்றும் ஆணுக்கு எதிரியல்ல
நீ ஆணுக்கு குறைவாய் எதிலுமில்ல

நான் பெண்ணாய் இருந்தால் உன் மீது பொறாமை கொண்டிருப்பேன்..
நான் ஆணாய் இருப்பதனால் உன்னை பெறாமல் பெற்றெடுப்பேன்.

இவ்வுலகம் உனை அக்னி சிறகு என்கிறது நீர் பட்டவுடன் அணைந்து விழுவதற்கு..

நீ ஆழியாச் சிறகு
யார் உனை தொட்டாலும் அது அழிந்து போகும் பிறகு..
அது ஒழிந்து போகும் பிறகு..
-ஜாக்✍️

எழுதியவர் : ஜாக் (8-Apr-20, 4:28 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
Tanglish : mangaiye
பார்வை : 3742

மேலே