திறமை

ஒரு ஊரில் வளவன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான்.அவனது பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள்.அவன் படிப்பில் சுமராகத்தான் படிப்பான்.ஆனால் அவன் நடனத்தில் சிறந்தவன்.அவனை படிப்பில் அக்கரை காட்டச் சொன்னால் அவன் நடனதின் மேல் குறியாக இருந்தான்.போட்டியில் நிறைய கலந்து கொண்டான் பரிசுகளை பெற்றான்.காலம் கடந்தது அவன் பெரியவன் ஆனான் படிப்பை முடித்தான் அவனுக்கு வேளை கிடைக்கவில்லை அவனது பெற்றோரும் உறவினரும் அவனை கேவலமாக பேசினர்.அவன் நடன ஆசிரியராக பணிபுரிகிரேன் என்று அவன் வீட்டில் கேட்டும் அவர்கள் வீட்டில் சம்மதிக்கவில்லை .அவன் அதனையும் மீறி ஒரு நடன ஆசிரியராக பணிபுரிந்தான்.மற்ற மாணவர்களுக்கும் நடன ஆசிரியராக பணிபுரிந்தான்.ஒரு முறை அவனது பள்ளிக்கு வந்த நடன இயக்குனர் அவனது நடனத்தை கண்டு வியந்து அவனை படத்தில் நடன ஆசிரியராக பணிபுரிய வாய்பை தந்தார்.அவன் அவனது திறமையால் நடன இயக்குனர் ஆனான்.நிறைய விருதுகளை பெற்றான்.அவனது புகளை கண்டு அவனது பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

எழுதியவர் : priya (9-Apr-20, 8:28 pm)
சேர்த்தது : PRIYA
Tanglish : thiramai
பார்வை : 217

மேலே