வண்ணப் பாடல்

வண்ணப் பாடல் ...!!!
*****************************
தத்தன தனந்த தத்தன தனந்த
தத்தன தனந்த தனதானா ( அரையடிக்கு)

சித்திரை பிறந்த விக்கணம் மகிழ்ந்து
சித்தமும் மலர்ந்து குளிராதோ ?
சிற்பர மெழுந்து முத்தொடு கனிந்து
செப்பிட நெகிழ்ந்து மனமாட !

பித்தமு மடங்க வற்புத மருந்து
பெற்றிட விழைந்து துதிபாட !
பித்தனும் விழைந்து நற்கதி வழங்க
பெற்றினி லமர்ந்து வருவானே !

முத்தமிழ் மொழிந்து குட்டுடன் வணங்க
முற்பட விறைஞ்சி யடிபேண
முப்புற முழன்ற நச்சது நடுங்க
மொய்ப்பொடு நிமிர்ந்து வரவேணும் !

எத்தனை நயந்தும் பற்றுடன் நினைந்து
மிப்படி வருந்த விடலாமோ ?
இக்குறை களைந்து பொற்புட னியங்க
இப்புவி விளங்க அருள்வாயே !!

சியாமளா ராஜசேகர்

சித்திரை திருநாள் வாழ்த்துகள்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (13-Apr-20, 10:58 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 43

மேலே