புத்தாண்டை வரவேற்போம்

புத்தாண்டை வரவேற்போம்
(சார்வரி வருடம் - 14.04.2020)


நேற்றுவரை நடந்ததெல்லாம்
கனவுகளாய் இருக்கட்டும்
இந்த புத்தாண்டு அனைவருக்கும்
மகிழ்ச்சிதனை தந்திடட்டும்

மனித இனத்தை அழிக்க நினைக்கும்
எதுவாய் இருந்தாலும் அது நேற்றோடு போகட்டும்
இன்று முதல் அசுர பலத்தோடு புது அவதாரம் எடுத்திடுவோம்
அனைத்தையும் வென்றிடுவோம்

புத்தாண்டு வருகுது
புத்துணர்ச்சி தரப்போகுது
புரியாத புதிரெல்லாம்
புது பரிமானம் பெறப்போகுது

ஆண்டொன்று பிறந்தாலும்
அளவிளா ஆச்சரியங்களை
அள்ளித் தரப் போகுது
நீங்களும் ஆயத்தமாகிடுங்கள்

விடை இல்லா வினாக்களுக்கு
விடைகளும் கிடைத்திடுமே
அன்றாட சொற்களுக்கு, நல்ல
அர்த்தங்களும் புரிந்திடுமே

புத்தாண்டை வரவேற்போம்
குதூகலத்துடன் வரவேற்போம்
புது பலத்தை நாம் பெறுவோம்
பூமிதனில் அலாதியாய் வாழ்ந்திடுவோம்

இக்கவிதையை படிக்கும் யாவருக்கும்
இன்முகத்தோடு சொல்கின்றேன்
புத்தாண்டு வாழ்த்துக்களை
புவிதனிலே நலமாய் வாழ்ந்திடவே

ஆனந்த் சுப்ரமணியம்
தேதி - 13.04.2020. நேரம் - இரவு - 11.17 மணி

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (14-Apr-20, 7:37 am)
பார்வை : 83

மேலே