கடைக்குட்டி செல்லம்
கண்விழிக்கும் முன்பே
கைவிடப்பட்டு வீதிவந்தாள்
பெண்ணென்பதாலே !!
தாய் மணம் மாறவில்லை
முகவரியோ தெரியவில்லை
மிருதுவான தேகமது
நெஞ்சைவிட்டு அகலவில்லை !!
மழலை சிரிப்பில்லை
மாறாய் பயந்திருந்தாள்!!
நடக்கவோ தெம்பில்லை
கண்களோ திறக்கவில்லை!
பசும்பால் ஊட்டி
பாசத்தையும் சேர்தூட்டி
பத்திரமாய் பார்த்துவந்தோம்
பஞ்சு மெத்தையிட்டு !!
நாளாக நாளாக
அவளின்றி நாங்களில்லை
அன்புச் சேட்டைக்கோ
பஞ்சமில்லை !!
பகல்முழுதும் உயிரெடுத்திடுவாள் செல்லமாக
இரவினிலே உயிர்காப்பாள் நன்றிக்காக !!
மனதது தளர்ந்திட்டால்
எங்கள் கடைக்குட்டிதரும்
முத்தமொன்று போதும்
மொத்த சிக்கலும் நீங்கும்!!
.
.
.
நன்றிகெட்டவன்
நாய்கலென்றும் இல்லை
மனிதர்கள் நாமே!!