மருத்துவருக்கு மயானத்தில் இடமில்லை
மருத்துவம் பார்த்த மனித குல தெய்வம்
மகுடம் சூடிய நோயால் மாண்ட நிலையில்
மரித்ததால் புதைக்க வேண்டி மயானம் சென்றதில்
மதி மங்கி மனிதம் அழுகி இதயம் செயலிழந்த
மதிப்புமிக்க மனிதர்களால் புறக்கணிக்கப்பட்ட
மனித தெய்வம் மயானத்திலிருந்து மறுபடியும்
மருத்துவமனை சென்று மரித்தும் காத்திருந்தது
மாபெரும் மனிதக்குலத்திற்கு மறையாத வடுவே
மனமில்லா மாசுள்ள மக்களால் எவ்வாறு மலரும்
மரியாதை மிக்க மகத்தான மண்ணின் வாழ்வு
மாடு ஆடு நாய் பூனை வெளவால் எலி நாகம் உண்ணும்
மக்களுக்கும் என்றும் அழிவு கொள்ளை நோயாலே .
------ நன்னாடன்.