சார்வரி சார் உள்ள வரியளா
சார்வரி ......சார் உள்ள வரியளா ?
கொரோனா .... மேடம் /சார் சித்த வெளிய போறீயளா ?
கொலைகாரி /ர கொரோனா கொன்னு தின்னது போறாதா ?
சார்வரி : தெருவில கோலத்தையும் காங்கல ஆளையும் காங்கல
எல்லாம் வெறிச்சோடிக் கிடக்குது எங்கேயிருந்து கூப்பிடுதீக ?
இதோ இங்கனதான் வீட்டுக்குள்ள முடங்கிக் கிடக்கோம்
ஊரடங்குல ....சன்னல் வழியே எட்டிப் பாருங்க
ஐயோ ....இது என்ன முகமூடி ....கொள்ளைக் காரங்க மாதிரி
அப்படி சொல்லாதீக புத்தாண்டைய்யா நாங்க எல்லோருமே நல்லவங்கதான்
உலகம் பூராவும் இந்தக் கொரானாவுக்கு உயிர கொள்ளைகொடுத்துட்டு
நிக்கோம் ?
இந்த அழகுல நான் ஏன் வரணும் விகாரியே நீடிக்கட்டும் !
சார் சார் சார்வரி சார் திரும்பிப் போயிடாதீங்க
சோசிய காரங்கள்லாம் நீங்க வந்தீங்கன்னா எல்லாம் சுபிட்ச்சாமாயிடும்
ஊரடங்கு முடிவுக்கு வந்துடும் வேலை வெட்டிக்கு போலாம்னு
சொல்லிருக்காங்க .......எங்க நம்பிக்கையில மண்ணை அள்ளிப்
போட்டுடாதீங்க அய்யா
அப்படியா சமாசாரம் சார்வரி நான் என் சர்வாதிகாரத்தையும்
பயன் படுத்தி இந்த கொரோனாவுக்கு ஒரு முடிவுகட்டி உங்களை
வாழவைக்கிறேன்
அது போதுமய்யா ....உங்களுக்குப் புண்ணியமா போகும் .
செய்தீங்கன்னா ஒவ்வொரு மாதத்தையிலையும் உங்க புத்தாண்டை
கொண்டாடுதோம் !