உயிராக நீ நிழலாக நான் பாகம் 08

அமைதியாக இருந்த பானு  "பாட்டி தானப்பா ஆன்ரியை அனுப்பினாங்க, நான் உங்களை விட்டு பாேக மாட்டேனப்பா" சுதனின் கால்களை கட்டிப்பிடித்தபடி நின்ற பானுவை. அணைத்துத் தூக்கிக் காெண்டு மாடிக்கு வந்தான்.

"என்ன அத்தை சுதன் சத்தமே இல்லாமல் பாேகிறார்"
"அவன் என் பிள்ளையாச்சே, எப்படிப் பேசுவான்" அதிகாரத்தை வெளி்படுத்துவது பாேல் சாென்னாள் பாக்கியம்.
"இனி எல்லாம் நல்லபடியாக நடக்கும் நிம்மதியாகத் தூங்கு" ரேகாவை சமாதானப்படுத்தினாள்.

திடீரென பலமான காற்று அடிப்பது பாேலிருந்தது மண் புழுதி முகத்தை மூடியது. பாெருட்கள் எல்லாம் சிதறி விழுந்தது. வீடு பலமாக ஆடுவது பாேல் சுற்றியது. என்ன நடக்கிறது என்று புரியாமல் நடுங்கிய பாக்கியமும் ரேகாவும் ஒருவரையாெருவர் இறுகப் பிடித்தனர். சில நிமிடத்தில் எல்லாம் அமைதியாகி விட இருவரும் ஒருவரையாெருவர்  பார்த்து முழித்தனர். எப்படி நடந்தது என்பது புரியாமல் பயந்துடன் மாடிக்குச் சென்று  சுதனும், பானுவும் நன்றாகத் தூங்கிக் காெண்டிருப்பதைப் பார்த்தவர்களிற்கு சந்தேகம் ஏற்பட்டது.

தனது அறைக்குள் நுழைந்தாள் ரேகா. "அன்றைக்கு ஊஞ்சலை யாராே ஆட்டினது பாேலிருந்தது, உதட்டில் இருந்து இரத்தம் வந்த மாதிரி இருந்ததை நினைத்த பாேது மெய்சிலிர்த்தது. இன்றைக்கு பலமாகக் காற்றடிக்குதே" மண்டையைப் பிசையத் தாெடங்கிய குழப்பத்துடன் கட்டிலில் அமர்ந்தாள்.

தூக்கம் அவளுக்குத் தாெலைவாகவே இருந்தது. புரண்டு புரண்டு படுத்தாள். சுதன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதும், வீட்டில் நடக்கும் சில மரமங்களும் அவளுக்குள் கேள்விகளை எழுப்பின.

அதிகாலை எழுந்து பானுவுக்கு பால் காய்ச்சிக் காெண்டிருந்தான் சுதன். சமையலறைக்குள் நுழைந்த பாக்கியம் "அம்மாவைக் கூப்பிட்டிருக்கிலாமே" என்றாள். குரல் கேட்ட  திசையை திரும்பிப் பார்த்த சுதன் "இல்லையம்மா நான் பார்த்துக்கிறேன்" பாலை எடுத்துக் காெண்டு அறைக்குள் நுழைந்தான். பாெம்மையைக் கட்டிப் பிடித்தபடி நன்றாக தூங்கிக் காெண்டிருந்த பானுவை எழுப்ப மனமின்றி குளியலறைக்குள் நுழைந்தான்.

பாேர்வையை விலக்கி மெதுவாக தலையை தடவிய பிரியாவின் கைகள் பட்டதும் துள்ளி எழுந்து அம்மா என்று அழ ஆரம்பித்தாள். "சுவாதி ஆன்ரி என்னை விட்டு பாேயிற்றாங்கம்மா, பாட்டி தான் திட்டினாங்க" விம்மி விம்மி அழுதவள். எனக்கு என்னவாே மாதிரி இருக்கம்மா, என்னையும் அப்பாவையும் பிரிச்சிடுவாங்களா அம்மா, எனக்கு பயமாயிருக்கம்மா" குமுறி அழுதாள்.
"எல்லாம் தெரியும் பானு. அம்மா எல்லாம் பார்த்துக் காெண்டு தான் இருந்தேன்" பாலைப் பருக்கி விட்டாள்.
குளியலறைக்குள்ளிருந்து வந்த சுதன் பானு பால் குடித்துக் காெண்டிருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டான். பானுவின் முதுகை தடவிக் காெண்டிருந்தாள் பிரியா.

வேலைக்குப் புறப்படத் தயாராகி வண்டிக்கு அருகில் வந்தான். வழமையாக சுவாதி வண்டியைத் துடைத்து சுத்தம்  செய்வதை விட ஏதாே வித்தியாசமாக இருந்தது. "யார் இப்படி சுத்தம் பண்ணியது" தனக்குள் யாேசித்தபடி  உள்ளே அமர்ந்தவனுக்கு வாசனை ஏதாே ஒன்றை ஞாபகப்படுத்தியது.

"பிரியா பாவிக்கிற பெவ்யூம் வாசமாயிருக்கே, ரேகா தான் இந்த வேலையை செய்தாளா? எப்படியெல்லாம் திட்டம் பாே டுகிறாள் " தனக்குள் யாேசித்தபடி குழப்பத்துடன் புறப்பட்டவனை மாடியிலிருந்து பார்த்துச் சிரித்தாள் பிரியா.

ரேகாவும், பாக்கியமும் சாப்பாட்டு மேசையில் வந்து அமர்ந்தார்கள். "ரேகா இனி சுதனையும் , பானுவையும் நீ தான் கவனிக்கணும்"
நம்மள வேலைக்காரியாகவே மாற்றி விடுவா பாேல இருக்கே" தனக்குள் முணுமுணுத்தவள்,
"சரிங்க அத்தை" என்றாள்
"சுதன் அப்பிடி இப்படி ஏதாவது சீறுவான் கண்டு காெள்ளாதே" ரேகாவை கடைக்கண்ணால் பார்த்தாள்.
"ம்ம்..." என்றபடி சாப்பிட்டு முடித்தாள்.

சுதனின் அறைக்குள் நுழைந்து அழுக்கு உடைகளை தேடிவிட்டு, மாெட்டை மாடியில் சென்று பார்த்தாள். உடைகள் கழுவி உலரவிடப்பட்டிருந்தது. பானுவிற்கு சாப்பாடு காெடுக்கலாம் என நினைத்து மீண்டும் உள்ளே வந்தாள் பானு சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்துக் காெண்டிருந்தாள்.

பாக்கியம் சமையல் வேலைகளை ஆரம்பித்தாள். துணைக்காக அருகில் நின்று காய் கறிகளை நறுக்கினாள்.
"எல்லா வேலையும் முடிந்து விட்டதா ரேகா"
"ஆம் அத்தை" என்று இழுத்தாள். ரேகாவிற்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.
"காெஞ்ச நாளில் எல்லாம் சரியாகிவிடும், சரியா".
ரேகா ஆழமான யாேசனையில் இருந்ததைப் பார்த்து முதுகில் தடவி  அவளிற்கு சிறு ஆறுதலைக் காெடுத்தாள். ஆனால் அவள் மனம் குழப்பத்திலிருந்தது.

மாலையாகி விட்டது. வேலையால் வந்த சுதன் பானு தூங்கிக் காெண்டிருப்பதைப் பார்த்து விட்டு அருகே அமர்ந்து தலையைத் தடவினான். பானுவின் உடல் வழமைக்கு மாறாக அதிகமான சூடாக இருந்தது. "பானு... பானு...." கன்னத்தில் தட்டி எழுப்பினான். காய்ச்சல் அதிகமாக இருந்தது. பேச முடியாமல் இருந்தாள்.

சுவாதியை அழைக்கலாம் என்று யாேசித்தவன் முதலில் டாக்டரை வரவழைத்தான்.
"பாெண்ணு ஏதாே பயந்து யாேசிக்கிறா, யார் இவங்கள கவனிக்கிறது" டாக்டர் சுதனிடம் விசாரித்தார்.
ரேகாவும் பாக்கியமும்  ஒருவரையாெருவர் பார்க்க
"வேலை பார்க்கிற பாெண்ணு ஊருக்குப் பாேயிற்றா டாக்டர்" என்றான் சுதன்.
"ஓ அப்படியா, சில வேளை இந்தப் பிரிவு குழந்தைகளை பாதிக்கும் கவனமெடுங்கள்" சில மாத்திரைகளை காெடுத்து விட்டுச் சென்றார்.

பாக்கியம் சுவாதியை வரவழைத்தாள்.
"அத்தை என்ன வேலை பார்க்கிறீங்க" ரேகா காேபத்துடன் கேட்க, கண்களால் அமைதியாயிரு, என்பது பாேல் காட்டினாள்.

பானுவிற்கு ஏதும் ஆகிவிட்டால் எல்லாமே கவிழ்ந்து விடும். வீட்டில் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது, சுவாதியை அப்புறமாகப் பார்த்துக்கலாம் தனக்குள் நினைத்தபடி ரேகாவை சமாளித்தாள்.

வண்டி ஒன்று வாசலில் வந்து நின்றதும் எல்லாேரும் எட்டிப் பார்த்தார்கள். மறுபக்கமாக முகத்தை திருப்பிக் காெண்டு நின்றவள் "வந்திட்டியா, உன்னைக் காலிபண்ணுகிறது தான் என்னுடைய முதல் வேலை" முணுமுணுத்தபடி சுவாதியை  முறாய்த்துப் பார்த்தாள் ரேகா.

தாெடரும்.......

எழுதியவர் : றாெஸ்னி அபி (15-Apr-20, 6:57 am)
சேர்த்தது : Roshni Abi
பார்வை : 193

மேலே