திருநங்கையை தினம் கொண்டாடுவோம்

ஏப்ரல் 15 திருநங்கைகள் தினம் சென்ற வருடம் பெரிய மனிதர்கள் குடியிருப்புகுதிகளில் விமரிசையாக கொண்டாடப்பட்டது மறுநாள் அனைவரும் வேலைக்கு செல்லும் நேரம் ஒரு திருநங்கை மட்டும் அங்கு வேலைக்கு செல்பவர்களிடம்‌ நேற்று எங்களுக்கான தினம் கொண்டாடினீர்கள் அந்த கொண்டாட்டம் வேண்டாம் எனக்கு ஒரு வீட்டில் வீட்டு வேலை தாருங்கள் என்றார் ஆனால் திருநங்கை என்பதால் யாரும் வேலை தரவில்லை அரசு சார்பாக தான் விழா எடுத்தோம் என்றும் பத்திரிகையில் பெயர் வருவதற்க்காகவும் தான் என்று கூறி அவரை அவமதித்தனர் அப்போது அந்த தெருவில் இட்லி வியாபாரம் செய்யும் பெண்மணி அந்த திருநங்கை நிலை கண்டு தன் கடையில் தண்ணீர் எடுத்து வரும் வேலை தந்தார் இதனை மற்ற நபர்கள் எதிர்த்தனர் ஆனால் அந்த பெண்மணி அஞ்சாமல் திருநங்கை தினம் தான் தாங்கள் கொண்டாடுவீர்கள் திருநங்கையை கொண்டாமாட்டீர்கள் நான் திருநங்கை தினம் கொண்டாடவில்லை திருநங்கையை கொண்டாடுகிறேன் என்றார் அனைவரும் பதில் கூற முடியாது திகைத்தனர்.

எழுதியவர் : மனோபா (15-Apr-20, 8:40 pm)
சேர்த்தது : மனோபா
பார்வை : 91

மேலே