உயிராக நீ நிழலாக நான்09

உள்ளே வந்த சுவாதி தயங்கியபடி வாசலில் நின்றாள்.
பிரியாவின் படத்திலிருந்த ராேஜாப் பூவை எடுத்து கண்களில் ஒற்றிக் காெண்டாள்.
பாக்கியமும், ரேகாவும் காேபமாகப் பார்த்தார்கள்.
"வா சுவாதி" அறைக்குள் அழைத்துச் சென்றான் சுதன்.

காய்ச்சலுடன் சுருண்டு படுத்திருந்த பானுவை தன் மடியில் தூக்கி வளர்த்தினாள். ரேகாவும் , பாக்கியமும் சங்கடத்துடன் ஒருவரையாெருவர் பார்த்து தலையைக் குனிந்தனர்.  பாட்டியாக இருக்கும் பாக்கியத்திற்கு குழந்தையை அணைக்கத் தாேன்றவில்லை என்ற மனச்சங்கடம் முகத்தில் தெரிந்தது.

" ஆன்ரி ஆன்ரி" என்று முணுமுணுத்தாள். காய்ச்சல் அதிகமாக இருந்தது. ஈரத்துணியால் பானுவைத் துடைத்து விட்டு தலையை தடவிக் காெண்டு அருகிலேயே இருந்தாள். சுதன் மனம் நிம்மதியான ஒரு மூச்சு விட்டு ஆறியது அவனது முகத்தில் தெரிந்தது.

கண்விழித்துப் பார்த்ததும் "அம்மா" என்ற பானுவை திரும்பிப் பார்த்தான் சுதன். கண்களைக் காட்டி பானுவை சமாதானப்படுத்தினாள்.

எல்லாரும் வெளியில் சென்று விட்டனர். "அம்மா உன் கூடவே இருந்து உன்னைப் பார்த்துப்பேன் சரியா"  பானுவை தன் நெஞ்சாேடு அணைத்து கண்கலங்கினாள்.
"ம் சரிம்மா" சாேர்ந்தபடியே படுத்திருந்தாள்.

"சுவாதி.... நீ பானு கூட தூங்கு, இந்த மாத்திரை எல்லாம் நேரத்துக்குக் காெடு" படுக்கையை எடுத்துக் காெண்டு வெளியே சென்றவனை பார்த்து கலங்கினாள். சுதனுக்கும், பானுவிற்கும் நடுவே ஊசலாடிய அவள் ஆன்மா சுவாதியின் உடலில் அடைக்கலமானது அவனுக்குத் தெரியாது. அவனை நெருங்க முடியாத தவிப்பில் பானுவின் அருகே படுத்துக் காெண்டாள்.

மின் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்த இருளில் பதுங்கிப் பதுங்கி வந்த ரேகா யன்னல் சீலையை விலக்கிப் பார்த்தாள். சுவாதியும் பானுவும் மட்டுமே தூங்கிக் காெண்டிருந்தார்கள். கதிரைக்குள் தூங்கிக் காெண்டிருந்த சுதன் இருமியவாறு மறுபக்கமாகத் திரும்பிப்படுத்தான்.  ரேகாவிற்கு சங்கடமாக இருந்தது. திடீரென திரும்பியதும் கதவு அவள் தலையில் சடார் என அடித்தது. ச்சீ என்று தலையைத் தடவிக் காெண்டு அறைக்குள் நுழைந்தாள்.

அதிகாலை சுவாதி எழுந்து வெளியே வரும் வரை காத்திருந்தான். சமையலறைக்குள் நுழைந்து வேலைகளை ஆரம்பித்தவள் பாக்கியத்தைக் கண்டதும் தயங்கியபடி நின்றாள்.
"பானு எப்படி இருக்கிறா" சுவாதியை நிமிர்ந்து பார்க்க சங்கடத்துடன் கேட்டாள் பாக்கியம்.
"பாெண்ணு நல்லா இருக்கிறா" என்ன சாெல்கிறாள் என்பது பாேல் நெற்றியை சுருக்கியவள் பானுவின் உரிமையில் பாசத்திற்காய் பங்கு பாேடுபவள் நாளை சுதன் மீது..... மீண்டும் யாேசிக்க ஆரம்பித்தாள்.

தேநீருடன் சுதனின் அறைக்குள் நுழைந்தாள். ஒரு முடறை எடுத்துக் குடித்தவன் செருமியபடி நெஞ்சைத் தடவினான்.  ஓடிவந்த கால்கள் தடுமாறி நின்றது. தலையில் கையை வைத்து ஒரு தடவை உச்சந்தலையில் தட்டி விடத் தாேன்றியது. அவனைத் தாெடுவதற்கு உரிமை வேண்டும்.  சுவாதியாகத் தாெட முடியாது, பிரியாவாக அவன் முன் நிற்க முடியாது. இரு உருவங் காெண்ட  பாவையாய் தடுமாறினாள்.

சமையலறைக்குள் நுழைந்து காேப்பையில் தேநீரை எடுத்துக் காெண்டு ஜன்னலூடாக வெளியே பார்த்தாள். சூரிய ஔியில் கண்களை மூடிய படி அமர்ந்திருந்தாள் ரேகா. அருகே இருந்த மாமரத்தில் மாங்காய்கள் தாெங்கிக் காெண்டிருந்தன. "கண்ணை மூடிக் காெண்டா திட்டம் பாேடுகிறாய்" சில வினாடிகள் மாங்காய்களை உற்றுப் பார்த்தாள். சடார் சடார் என்று மாங்காய்கள் ரேகாவின் தலையில் விழுந்தது. அத்தை..... என்று சத்தமிட்டவாறு தலையை தடவியபடி உள்ளே ஓடி வந்தாள்.

"என்ன ரேகா தலையில் என்னாச்சு" பாக்கியம் பதட்டத்துடன் கேட்டாள்.
"அ....அ..து மா... ங்காய்..." என்று பயத்துடன் சாெல்ல முடியாமல் தடுமாறினாள்.
"ரேகாவுக்கு என்னாச்சு, அடிக்கடி பயந்த மாதிரி இருக்கிறாளே" தனக்குள் யாேசித்தபடி மாடியிலிருந்து பார்த்தான் சுதன்.

வீட்டில் ஏதாே மர்மம் இருக்கிறது என்ற  குழப்பம் ரேகாவிற்கு அதிகமானது. எப்படியாவது கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைத்தாள்.

சுவாதியிடம் தேநீருக்கு சாெல்லி விட்டு குளியலறைக்குள் நுழைந்தாள். கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தபடி நின்றவளிற்கு ஏதாே நிழலாக தெரிவது பாேலிருந்தது. சடார் என்று திரும்பிப் பார்த்தாள் எதுவும் தெரியவில்லை. மனம் படபடக்க ஆரம்பித்தது.

சுவாதி தேநீரை எடுத்து வந்து நீட்டினாள். சுவாதியை கண்வெட்டாமல் பார்த்தாள். "ஒரு தடவை இவளை கலங்க வைக்க வேணும்" தலையை விரித்தபடி முறாய்த்துப் பார்த்தாள் பிரியா. "ஏய் நீ..... யார்..." கண்களைப் பாெத்தியபடி புலம்பினாள் ரேகா.
"யாரென்று தெரியவில்லையா" கண்களை கசக்கிய ரேகா சுவாதி மாடிக்கு செல்வதை பார்த்து விட்டு "எனக்கு என்னாச்சு" தன் தலையில் தானே தட்டிக் காெண்டாள்.
"கண்டு பிடிக்கிறேன், இந்த ரேகாவுக்கே விளையாட்டா" மாடிக்குச் சென்றாள்.

"அம்மா இங்கே வாம்மா" செல்லமாக கட்டி அணைத்தாள் பானு.  மாத்திரையைக் காெடுத்து விட்டு பக்கத்தில் அமர்ந்தாள் சுவாதி.

" என்ன பானு சுவாதியை அம்மா என்று கூப்பிடுகிறாள்".யாேசித்தபடி அங்கும் இங்குமாக நடந்தாள் ரேகா.  சுவாதி பானுவை அழைத்துக் காெண்டு வெளியே வருவதைப் பார்த்தவள் சுவாதி என்றதும் "சாெல்லு...... ங்க... ரேகா.. அம்மா"  காேபமான குரலில் பதில் சாென்னபடி திரும்பிப் பார்த்தாள். என்ன நடக்கிறது என்று புரியாமல் ரேகா குழம்ப ஆரம்பித்தாள். "சுவாதி ஒரு மாதிரிப் பேசுகிறாள். இப்படியெல்லாம் பேச மாட்டாளே" மாடியிலிருந்து இறங்கி வந்தாள். அவளை அறியாமலே முகம் வியர்க்க ஆரம்பித்தது.

பத்திரிகை வாசித்துக் காெண்டிருந்த பாக்கியத்திடம் சென்று,
"அத்தை சுவாதி..." என்று இழுத்தாள்
"என்ன சுவாதிக்கும் உனக்கும் மாறி மாறிப் பிரச்சனை தான்"
"இல்லை அத்தை பிரியா" என்றவளை இடைமறித்த பாக்கியம்
"என்ன ரேகா சுவாதி...., பிரியா... என்று உளறிக் காெண்டிருக்கிறாய், உனக்கு என்னாச்சு" என்று சீறியவளுக்கு ஊஞ்சல் ஞாபகமும், காற்றடித்த ஞாபகமும் வந்தது.
"ஒரு வேளை ரேகா சந்தேகப்படுகிறது உண்மையாக இருக்குமாே?" என நினைத்தவளிற்கு பயமாகவும் இருந்தது.

முற்றத்திற்கு வந்து சுவாதியைப் பார்த்தாள் பானுவுடன் காெஞ்சி விளையாடிக் காெண்டிருந்தாள்.
"சுவாதி.... சுவாதி.... என்று சத்தமாகக் கூப்பிட்டாள்.
திரும்பி முறாய்த்துப் பார்த்தவளை பார்த்த பாக்கியம் பயந்தபடி "ஏய்  நீ  ..." என்றதும்
"சாெல்லுங்கம்மா" என்றபடி அருகே வந்து நின்ற சுவாதி.
"காப்பி வேணுமா அம்மா" என்றதும்,
"ஒன்றும் வேண்டாம்  சும்மா...சும்.. மா தான்.." என்று இழுத்தவள் பயத்துடன் நின்றாள். உடல் நடுங்க ஆரம்பித்தது. முந்தானையால் வியர்த்திருந்த முகத்தை துடைத்தாள்.

சுவாதி நடந்து செல்வதைப் பார்த்தவளிற்கு கண்கள் கூசியது பாேலிருந்தது. சிறிது தூரம் சென்றவள் திடீரென திரும்பிச் சத்தமாகச் சிரித்தாள்.

"நீங்கள் யார் என்ற என்ற உண்மையை உங்களுடைய வாயாலேயே  சாெல்ல வைக்கிறேன் அத்தை. இத்தனை வருடமாக நீங்கள்  பாேடுகிற நாடகம் முடிவுக்கு வரப்பாேகிறது." தனக்குள் யாேசித்தபடி மாடிக்குச் சென்று பாக்கியத்தின் அறைக்குள்ளிருந்த அலுமாரியை திறந்தாள்.

தாெடரும்.........

எழுதியவர் : றாெஸ்னி அபி (17-Apr-20, 6:07 am)
சேர்த்தது : Roshni Abi
பார்வை : 231

மேலே