சமுதாயத்தைக் காப்போம்

நோய்தனை ஒழிக்கும் முன்னே
--தடுத்திட ஒருவழி காண்போம் !
வாய்ச் சொல்லால் போரிடாது
--செயல் மூலம் வெல்வோம் !
பகையாளி என்றென பிரித்திடாமல்
--போராளி தமிழரென ஒன்றாவோம் !
அரசியலும் காழ்ப்புணர்வும் மறந்து
--எதிரி கொரானோவை அழிப்போம் !

உரசல்கள் உள்ளத்தில் நிலைத்தால்
--இலக்குகள் தவறாகி தோற்போம் !
அதிகாரம் காட்டுகின்ற நேரமல்ல
--அரவணைத்து செல்லும் வேளையிது !
அடிமைகள் நாமல்ல எவருக்குமென்று
--அனைவரும் உணர்ந்திட இணைவோம் !
சமூகபரவல் வாராது தடுத்திடுவோம்
--சமதர்ம சமுதாயத்தைக் காப்போம் !

பழனி குமார்
15.04.2020

எழுதியவர் : பழனி குமார் (15-Apr-20, 11:27 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 722

மேலே