மீண்டும் இறைவனிடம் மனு

மயிலேறி வருவாயோ வடிவேலா
மாமகள் வள்ளி மணவாளா குமரா
சேவர்க் கொடியோனே கோவித் திருக்கோனே
குன்றெல்லாம் உந்தன் கோயில் என்றால் அண்ணலே
அத்தனைக் கோயிலும் இன்று நடை சாத்தியிருக்க
மேதினியில் இன்று கொரோனா விட சுரத்தால்
நிலைகுலைந்து போயிருக்கும் உன் பக்தரெல்லாம்
நீ காத்திடுவாய் என்று தம் தம்
வீட்டிலேயே உளமார உன்நாமம் கூறி
'காக்க காக்க கனகவேல் காக்க
என்று வான் அதிர வேண்டுகின்றார் இன்னும்
உந்தன் காதுக்கு எட்டாதது ஏனோ
முருகையா , உன் நாமம் கூற
சரவணனே உன் வேல் வந்து காக்கும்
என்பது உண்மையானால் வடிவேலா விரைந்து
வந்து எம் துயரைத் தீர்த்திடுவாய்
'ஓம் சரவணா பவ;'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Apr-20, 11:20 am)
பார்வை : 52

மேலே