ஊரடங்கு
உயிர் அடங்குவதைத் தடுக்க
நாடளுபவர்களால் நாட்டப்பட்ட ஆணை
கூடாமல் இருக்க கோட்பாடுகளை ஆக்கி
குவலயத்து மக்களை குடும்பத்தோடு காக்க
மண்டலம் ஒன்றிற்கு உண்டியலுக்கு வகை செய்து
மகத்துவம் செய்ய மத்திய மாநில அரசுகளின்
மாட்சிமையான நடவடிக்கையே இது!
உள்ளவர்கள் ஈந்து இல்லாதவர்களை காக்க
உள்ளார்ந்த அன்போடு உரியவர்களை மீட்க
நல்லவொரு நாட்களை நமக்கிட்ட நோயாம்
கிரிட கிருமியை ஒன்றிணைந்து விரட்டிட
கீழ்ப்படிந்து நடந்து நம் கீர்த்தியை பெருக்கியே
கோள உலகில் மேலானோர் நாம் என்றும்
நாளைய உலகின் நம்பிக்கை நாமென சூளுரைப்போம்
------ நன்னாடன்.