அவள் அங்கே நான் இங்கே
உன் அணைப்பில் இன்பம் பருகினேன் நானே
என்று நினைத்தேன் அது வெறும் கனவு என்று
தெளிந்த பின்னே அங்கு என் அணைப்பில்
என்னவளே நீ இல்லை என் தலையணையே
நான் உன்னை அணைத்தது கனவில்-நனவில்
நீ இதோ துயில்கின்றாய் உன்தனியறையில்
தீய கொரோனா தந்த பீதி நம்மிடையில்