கருவின் குரல்
என்னை சூழ்ந்தது கடல்....
சிறிய இருட்டறைக்குள்!
உன் தொப்புள்கொடி நூலக....
சூழ்ந்தது என்னை!
கண் திறக்காத நிலையில் கற்பனை உலகம்....
திடிரென்று,
மாயமாவது போல் உள்ளுணர்வு.
காதில் யாரோ?
எனக்காக கதறும் அழுகை!
கேட்டுக்கொண்டிருக்க....
அந்நிமிடம்,
காணாமல் போன சத்தம்....
என் தாயின் போராட்ட யுத்தமாக!
என் விடியலை நோக்கி
அவள் பயணிக்க புறப்பட்டபோது.... !!!