என் அன்புத்தாய்
நான் அழுதேன்
நீ சிரித்தாய்
நான் தவழும்போது
அதைக் கண்டு ரசித்தாய்
நான் நடந்தேன்
நீ வியந்தாய்
நான் நடந்தால்
என் பின்னால் வருவாய்
நான் விழும் போதெல்லாம்
என்னை அணைத்தாய்
நான் பள்ளி செல்லும் போதெல்லாம்
நானும் அழுதேன்,நீயும் அழுதாய்
நான் பள்ளி செல்ல வேண்டாம்
என்று அழுதேன்!
நீ என் மகன் என்னை விட்டு
பிரிந்து செல்கிறான்
என்று அழுதாய்!
நான் வளர்ந்து
ஒரு நிலைக்கு வந்தபின்
என் மகன் என்று
என் பெயர் சொல்லி
மகிழ்ந்தாய்!
அத்தகைய என் அன்பான
உயிரான தாயே
உன்னை பிரியேன்
உன்னை நன்று காப்பேன்
என்று உறுதி கூறுகிறேன்.........
-இப்படிக்கு
உன் அன்பு மகன்
பா.அய்யனார்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
