அப்பா - மகள்
அப்பா -
நீங்கள் சம்பாதித்த போது
வாராத சந்தோசம்
நீங்கள் சம்பாதிக்காத போது
வந்தது -
ஊருக்குத்தான் - இது
ஊரடங்கு காலம்
உண்மையில் - இது நமக்கு
ஊர் திருவிழாவைப் போன்றதொரு
பொற்காலம் -
ஏன் தெரியுமாப்பா..?
பிறந்து நினைவு தெரிந்து -
இப்போதுதான் நீங்கள் குடிப்பதில்லை-
இப்போது இருப்பதுபோல் - எப்போதும்
குடியை மறந்திருங்கள் - நீங்கள்
குடிக்காத நிலையில்தான்
உங்களின் பாசம்
உங்களை அறியாமல் வெளிப்படுகின்றது-
மகளே...
மகளே... என்று
நீங்கள் வாயற கூப்பிடும்
வார்த்தைகள் - என்
வாழ்க்கையில் நம்பிக்கையூட்டும்
வார்த்தைகளாக வந்து விழுகின்றன -
அப்பா -
நீங்கள்
நாலு பேர் -
தப்பா பேசறா மாதிரி
இனி குடியோடு வாழவேண்டாம் -
நாலு பேர் -
மதிக்கிறா மாதிரி
இனி குடும்பத்தோடு வாழ்ந்தால்போதும்-
அப்பா -
இனி நீங்க
இப்படியே இருந்து சம்பாதிங்கப்பா
.........
நல்ல பேரை -
நாம வறுமையிலும் வாழ்ந்தாலும்-
நாம மானத்தோடு வாழலாம்....!!!
- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி