புத்தகக் காதலர்கள்

அரண்மனை போன்ற வீட்டில் எப்போது ஓய்வு நேரம் கிடைத்தாலும் தன் புத்தக அறையிலேயே செலவிடுபவன் ருத்ரன் .

ஆம்... கதையின் நாயகன் இவன் தான் .

படித்து படித்து பண்பாளனாக மாறிய செல்வந்தன் . மூன்று தலைமுறைக்கு அமர்ந்து உணனும் செல்வம் பெற்ற குடும்பத்தின் மூத்த மகன் .

புத்தகங்களின் மீது கொண்ட காதலால் திருமணத்தை தவிர்த்து வந்தவன் . வயது முப்பத்தைந்தை கடந்துவிட்டது .

வீட்டில் ருத்ரனுக்கு இரண்டு உடன் பிறப்புகள் இருக்கின்றனர் .  ஒன்று தங்கை மற்றொன்று  தம்பி .

பக்கத்து ஜெமீன் பரம்பரையில் யாழ்வேந்தன் என்ற மணாவாளனுக்கு திருமணம் முடித்து அனுப்பிவிட்டன தங்கை மீனலோச்சினியை .

மீதம் இருக்கும் தம்பி  கேஷவன் அவனுக்கும் திருமணம் முடிக்கும் வயது நெருங்கி இருந்தது . எனவே ருத்ரனை கல்யாணம் செய்து கொள்ள சொல்லி தாய் பரிமளம் நச்சரித்தார்  .

உனக்கு திருமணம் முடித்தால் தான் இளயவனுக்கும் பெண் பார்க்க முடியும் . கடைசியாக என்ன தான் சொல்கிறாய் ருத்ரா... என்று சற்று கோபத்துடனே கேட்கிறார் பரிமளம் .

அதற்கு பதிலாக எனக்கு மனைவியாக வருபவள் என்னை நேசிப்பதை விட புத்தகத்தின் மீது காதல் கொண்டவளாக இருக்க வேண்டும் . அப்படி ஒரு பெண் கிடைத்தால் சொல்லுங்கள்  என்றான் ருத்ரன் தன் தாயிடம் .

ம்ம்... சரிதான் ஒரு பெண் என்பவள் அழகுடனும் நல்ல பண்புகளுடனும் நல்ல குணவதி யாக இருந்தால் போதாதா ....

நம் குலம் தழைக்க ஒரு பெண் வந்தால் போதும் என்று இருக்கிறேன் ருத்ரா... என்றார் அவனின் அன்பு தாய் .

நீ ஒருவன் புத்தக புழுவாக இருப்பது போதாத . உன்னை போல இன்னோன்றா எங்கே போய் தேடுவது அத்தகைய பெண் ஒருத்தியை என்று முடித்தார் பரிமளம் .

அம்மாவின் பேச்சில் மனம் வாடிய ருத்ரன் சரி இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது . தம்பி கேசவனுக்கு திருமணம் முடித்து விடுங்கள் .

நம் குலம் தழைப்பது அவன் மூலமாகவே இருக்கட்டும் என்று யோசனை கூறுகிறான் .

இதை கேட்டதும் பரிமளம் அப்படி நம் பரம்பரையில் இது வரை நடந்திராத ஒன்று .

மூத்தவன் இருக்க இளையவனுக்கு திருமணமா ?.... அது முடியவே முடியாது .

நான் சொல்லும் பெண்ணை நீ... திருமணம் செய்தே ஆக வேண்டும் . என்று கட்டளை தெரிவித்து அங்கிருந்து நகர்ந்தார் .

ருத்ரன் மிகுந்த மன வருத்தம் கொண்டு
தன் நண்பன் முகிலனை சந்திக்க செல்கிறான் .

அங்கு முகிலன் வீட்டின் அழைப்பு மணி அழுத்திவிட்டு காத்திருக்கிறான் நாயகன் .

ஒரு அழகிய வெண்ப்புறா  வெண் மேகம் மிதந்து வருவது போல் வந்து கதவுகளை திறந்து நின்றது .

கையில் இருந்த புத்தகத்தில் இருந்து விழிகளை சற்றே உயர்த்தி ருத்ரனை கண்டு  புருவம் உயர்த்தி யார் வேண்டும் என்பது போல் கேள்வி எழுப்பியது அந்த வெண்ப்புறா  .

அவள் முகமே கூறிற்று தெளிவான சிந்தனை கொண்டவள் என்றும் . மேலும் எந்த அளவு அவள் புத்தகத்தை நேசிப்பவள் என்பதும் அவள் நின்றிருந்த தோரனையிலேயே தெரிந்தது ருத்ரனுக்கு .

அவளை கண்டதும்  பேச்சற்றவனாக நின்றுவிட்டவனை சற்று கூர்ந்து நோக்கிய பெண் .

முகிலனை பார்க்க வேண்டுமா ?...என்று குயிலோசை எழுப்பவே சுயநிலை பெற்றவன் போல் தலை அசைத்தான் ருத்ரன் .

அதற்குள் முகிலன் வந்துவிடவே இவர்களை கண்டதும் அப்பாடா ... நான் நினைப்பது நடந்து விடும் போல் இருக்கிறதே .

இரண்டு  புத்தக காதலர்களும் சேர்ந்து காதல் செய்து ஒரு புதிய நூலகத்தையே உருவாக்கி விடுவார்கள் போல் இருக்கிறதே ....

என்ற நினைப்புடன் அவர்களை நெருங்கி வந்து இருவரையும் அறிமுகம் செய்து வைத்தான் முகிலன்

இப்படியாக ....

இவன் ருத்ரன் எனும் தனி நூலகம் . என் உயிர் நண்பன் 
புத்தகங்களை மட்டுமே தன் காதலாக கொண்டவன் என்று அந்த வெண்ப்புறாவிற்கு அறிமுகம் செய்தான் .

மிகுந்த ஆச்சரியம் ததும்பும் கண்களுடன் ருத்ரனை முழுவதுமாக பார்த்தாள்  அவள் .

இப்போது வெண்ப்புறாவின் பெயர் கூற வேண்டும் இல்லையா...

இதோ அறிமுகம்...

ருத்ரன் ஆவலுடன் எதிர்ப்பார்த்து நின்றான் .....

முகிலன் அறிமுக படலம் ஆரம்பித்தான் . இவள் என் சகோதரி (தங்கை) என்னை விட மூன்று வயது சிறியவள் . பெரியப்பா ,பெரியம்மா விற்கும் தாமதமாக பிறந்த தவப்புதல்வி . 

சிங்கப்பூரில் வசிக்கிறார்கள் . இவள் பெயர் பூங்குழலி  பேராசிரியராகப் பணிபுரிகிறாள் .

புத்தக மலையே தந்தாலும் அதில் உள்ள அத்தனை சொற்களையும் விழுங்கி விடும் தன்மை கொண்டவள்‌ . சிறு வயதிலிருந்தே இப்படி தான் குழலி .

இதனாலேயே இன்னும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை இவள் ‌. பெரியப்பாவும் , நாங்கள் எல்லோரும் எத்தனை கவலை இவளின் பிடிவாதத்தினால் .

புத்தக பிரியனை தான் திருமணம்  முடிப்பேன் என்ற பிடிவாதம் இவளுக்கு .

வரும் மாப்பிள்ளை யெல்லாம் இவள் கேட்கும் புத்தக பெயர் தெரியாமல் தலை தெறிக்க ஓடி விடுகிறார்கள் . என்று அவளை பற்றி அறிமுக படலம் முடித்தான் முகிலன் .

ருத்ரன் , குழலி இருவருக்கும் ஒரே நேர்கோட்டில் ரசனைகளும் , விருப்பங்களும் , கோட்பாடுகளும் மிக பொருத்தமாக பொருந்திவிடவே அவர்களின் பேச்சு புத்தகங்களை பற்றியே ஆரம்பித்து  விட்டது  .

முகிலன் என்ற ஒருவன் இருப்பதையே மறந்து விட்டனர்  இருவரும் .

பிறகு என்ன ....

தாய் பரிமளத்தின் கவலைகள் நீங்கி . இரண்டு புத்தக காதலர்களையும் சேர்த்து வைத்து விட்டார் .

வாழ்க்கையையும் காதலிக்க சொல்லி திருமணம் எனும் பந்தத்தில் இணைத்து .

இனி ருத்ரன் பூங்குழலி  காதல் புத்தகங்களுடனே நீண்ட பயணமாக தொடரட்டும் ....

விரைவில் இவர்களின் வாழ்க்கை கதையும் புத்தகமாகும்  வரையில் .

இவர்களே எழுதும் கதையாக இன்னும் பல புத்தக காதலர்களை  உருவாக்கிவிடவே..... .

நன்றி .....

✍️
piyu

எழுதியவர் : Piyu (18-Apr-20, 8:00 pm)
சேர்த்தது : Piyu
பார்வை : 102

மேலே