அமானுஷ்ய பொம்மை

அந்த கார் ஊட்டி செல்லும் மலை பாதையை அடைந்து அதன் கொண்டை ஊசி வளைவுகள் கடந்து செல்ல இன்னும் ஒரு மணி நேர பயணம் இருந்தது .

மயூரன் மற்றும் அவன் மனைவி 
ஸ்ரீ லேகா இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு மாத காலமே ஆனதால் ஊட்டி ஹனிமூன் கொண்டாடும் மகிழ்ச்சியில் சென்று கொண்டிருந்தனர் .

காரின் மெல்லிய இசையும் வழியில் தெரியும் இயற்கை காட்சிகளையும் கண்டு ரசித்தவண்ணம் .

வழியில் அங்காங்கே கிடைக்கும் இளநீர் மற்றும் ஸ்னாக்ஸ் கொரித்து கொண்டும்  பயணித்தனர்.

அவ்வபோது கண்களால் மௌன மொழி பேசியபடி . இந்த இன்பமான தம்பதிகளை  சுமந்து சென்று கொண்டிருந்த கார் திடீரென்று பாதையில் நின்றுவிட்டது .

வழியில் உதவிக்கென்று எவரும் இல்லை . போக்குவரத்து வாகனங்களும் கண்ணுக்கு எட்டிய வரையில் தெரியவில்லை .

மயூரன் அப்போது தான் கவனித்தான் தாங்கள் செல்ல வேண்டிய பாதை மாறி வந்து விட்டோம் என்று .

என்ன செய்வது என்று காரின் முன் பக்க இன்ஜின் பகுதி திறந்து ஆராய்ந்து கொண்டு இருந்தான் .

ஸ்ரீ லேகா நீண்ட நேரம் காரில் அமர்ந்து வந்ததில் சற்று நடந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது‌ எனவே .

காரிலிருந்து இரங்கிய லேகா மயூர் நான் கொஞ்சம் நடக்கட்டுமா . கால்கள் ரெண்டும் மரத்து போன மாதிரி இருக்கு என்றாள் .

மயூரன் இல்ல மா... ஸ்ரீ இது தெரியாத பழக்கம் இல்லாத இடம் வேற அதனால நீ வேனும் னா கார் பக்கத்திலேயே கொஞ்சம் நேரம் நடந்துக்கோ மா... என்றான்  . 

நான் இங்கே கார் மெக்கானிக் ஷாப் எதாவது இருக்கா என்று போன் செய்து பார்க்கிறேன் என்று தன் மொபைலை எடுத்து கூகுள் சர்ச் செய்ய தொடங்கினான் .

ஸ்ரீ யும் சரி என்று கூறிவிட்டு சிறிது நடந்தாள் ஒரு இரண்டு முறை நடந்திருப்பாள் .

மென்மையாக காற்று வீசுவது போல் தோன்றியது அவளுக்கு மயூர் என்று தன் கணவனை அழைக்க திரும்பினாள்  .

அவன் சிக்னல் கிடைப்பதற்காக காரை விட்டு ஐந்தடி தள்ளி நின்றிருந்தான் .

ஸ்ரீ அழைக்கும் சத்தம் மயூரனுக்கு கேட்க வில்லை சற்று நேரத்தில் காற்று பலமாக வீசியது .

எங்கிருந்தோ கோவில் மணி சத்தம் போல் கேட்டது அவளுக்கு .

அப்போது தான் அவள் தான் மயூரை விட்டு நீண்ட தூரம் தள்ளி நின்றிருக்கிறோம் என்பதை உணர்ந்தாள்  .

மயூரன் கார் சரி செய்ய முயற்சித்து கொண்டு இருந்தான் போன் சிக்னல் கிடைக்காததால் . அவனும் ஸ்ரீ யை கவனிக்க வில்லை .

அவள் மீண்டும் திரும்பி செல்ல நினைக்கும் போது வலது புறம் ஒரு கோவில் தெரிந்தது அவளுக்கு .

அதன் வெளி புறத்தில் இருந்த மரத்தில் அனேக பொம்மைகள் கட்டி தொங்கவிட பட்டிருந்தது .

அதனை ஸ்ரீ லேகா பார்த்ததும் மயூ....... ர் என்று கத்தி கொண்டே கீழே மயங்கி சரிந்தாள் .

அவளின் சத்தத்தில் தான் மயூரன் அவளை கவனித்தான் . ஸ்ரீ மயங்கி சரிவதை கண்டதும் விரைந்து அவளருகே ஓடினான் .

ஸ்ரீயை  மடியில் தாங்கி கண்ணத்தை தட்டி எழுப்பி பார்க்க எந்த சலனமும் தெரியவில்லை சரி என்று .

அவளை தூக்கிக்கொண்டு கார் அருகே வந்து  காரில் கிடத்தி தண்ணீர் முகத்தில் தெளித்து எழுப்பினான் .

மெல்ல கண்விழித்த ஸ்ரீ லேகா தன் கணவனை கண்டதும் அவனை இருக்கமாக பற்றி கொண்டு .

மயூ.. மயூ.. அங்க.. என்று தினறினாள் .  மயூரன் ஸ்ரீ யின் தலையை வருடி ஒன்னும் இல்லை மா... வீணாக பயப்படாதே  எதுவும் இல்லை என்று ஆறுதல் கூறினான் .

ஸ்ரீ இல்லை மயூர் அங்க ஒரு கோவில் இருக்கு . அதில் நெறைய பொம்மைகள் கட்டி தொங்கிட்டு இருக்கு .

அதுல... அதுல... என் தோழி ஜானு வோட அவள் எப்பவும் ஆசைய வைத்திருக்கும் பொம்மையும் இருந்தது .

அவ இப்ப என் கூட இல்ல  இறந்து விட்டாள் சின்ன வயசிலேயே . அந்த பொம்மையை‌ எனக்கு மட்டும் தான் தருவாள் .

நாங்க ரெண்டு பேரும் எவ்ளோ சந்தோஷமா இருந்தோம் தெரியுமா எங்கள் சின்ன வயசில் என்று ஸ்ரீ கூறினாள் .

இதை கேட்ட மயூரன் ஒன்னும் இல்ல மா... நீ உன் தோழியை பற்றியே யோசிச்சிட்டே இருந்திருப்ப அது தான் உனக்கு அப்படி தெரிந்து இருக்கு .

இரு காரை சரி பார்த்தேன் இல்லையா..  ஒரு முறை காரை ஸ்டார்ட் செய்து பார்க்கிறேன் . முதலில் இங்கு இருந்து கிளம்பலாம் என்று கூறிவிட்டு .

காரை ஸ்டார்ட் செய்தான் அவன் . கார் உடனே கிளம்பி விடவே ஆச்சரியம் தான் மயூரனுக்கும் .

இது எப்படி ?... என்று மிரர் வழியாக பின் புறம் பார்த்தான் . ஒரு பொம்மை கைகள் அசைத்து டாட்டா என்று கை அசைத்த  படி நின்றிருந்தது .

அதை கண்டதும் மயூரனுமே கொஞ்சம்  திடுக்கிட்டு தான் போனான் .

அமானுஷ்ய பொம்மைகள் இருப்பது  உண்மையா ?.... என்ற கேள்வியுடன் . ‌

மீதி பயணத்தை மேற்கொண்டனர் இளம் ஜோடி ..

🌼🙏🌼
✍️
piyu
 

எழுதியவர் : Piyu (18-Apr-20, 8:02 pm)
சேர்த்தது : Piyu
Tanglish : AMANUSHYA pommai
பார்வை : 115

மேலே