திருடர்களின் வேதனை

இந்தா கொரோனாச் சனியன் வந்து நம்ம பொழப்பில மண்ணை அள்ளிப் போட்டிருச்சு அண்ணே.
@@@@@
ஆமாம்டா கூமட்டக் கோவிந்தா. எங்கயும் கூட்டம் கூடறதில்ல. பெரிய பெரிய கடைங்க மூடி கெடக்குது. பெண்கள்
வசதியான பொம்பளைங்க வெளில வர்றதில்ல. மஞ்சக்கயிறுக்காரிங்களும் வெறும் கழுத்து சின்னப்பிள்ளைங்கதான் வெளில வர்றாங்க. எல்லாம் ரேசன் கடையை நோக்கி போறாங்க. ஊரு சுத்தற பசங்க தனியா பைக்கில் வர்றானுக. அவுனுகள மடக்கி அவுனுக செல்பேசியையோ பைக்கயோ புடுங்கனாக்கூட அதை விக்க முடியாது.
@@@@@@
என்ன அண்ணே செய்யறது?
@@@@@@
திருட்டில நெறையச் சம்பாதிச்சு தினம் பிரியாணியாச் சாப்பிட்ட நாக்கு இப்ப மரத்துப்போச்சுடா கூமட்ட. இலவச சோத்தை சாப்பிட்டா சத்துக்கெட்டு ஒடம்பு எளச்சுப் போகும்டா. நம்ம பொண்டாட்டி பிள்ளை குட்டிங்க அதைச் சாப்பிட்டுட்டு இருப்பாங்க.
@@@@@@
நாம ரணடு பேரும் என்ன அண்ணே செய்யறது?
@@@@@
ஆமாம்டா. கொரோனாச் சனியன் ரண்டு மாசத்துக்குள்ள தொலைஞ்சு போயிடும். நம்ம ஒடம்புல தெம்பு இருந்தாத்தான் நம்ம
திருட்டு வேலையை மறுபடியும். அதனால...
@@@@@
அதனால நாம மூலைமுடுக்கலாம் நம்ம கண்ணுல படற காவல் அதிகாரிங்க முன்னாடி பாட்டு பாடிட்டு விசிலடிச்சு போவோம.
@@@@@
உள்ள பிடிச்சு போட்டுருவாங்க அண்ணே.
@@@@@
அதுக்குத்தான்டா கூமட்ட உள்ள போனா சத்தான களி உருண்டை, அவிச்ச சுண்டல், வேர்க்கடலை, பச்சப்பயிறு சாப்பிட்டு உடம்ப தேத்திக்களாம். அங்க வேலை செஞ்சா அதுக்கு கூலியும் தருவாங்க. ரண்டு மாசம்தானே.
@@@@@@
அருமையான யோசனை அண்ணே. சப்பாசு. இப்பவே போவோம்.

எழுதியவர் : மலர் (18-Apr-20, 11:24 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 107

மேலே