இரட்டை நாக்கு…

இரண்டு மனம்
இருந்தால் கூட
இடர்பாடு ஏதுமில்லை
இந்த உலகிலே
இரட்டை நாக்கு
இருந்து விட்டால்
இரண்டு மடங்கு
இழப்பு வீட்டிலே…..

சொல்வது ஒன்றாய்
செய்வது வேறாய்
நாளும் நடந்திடும்
வஞ்சக நரிகள்
வாழும் நாட்டிலே
நெஞ்சம் நெகிழ
பஞ்சம் போக்கி
வாழ்வது எப்படி……

காட்சியும் கானமும்
சாட்சியாய் கொண்டே
மாட்சிமை கண்டிட
காலமும் நேரமும்
கனிவது எப்போது
காரணம் அறிந்தே
தேவையைநிறைவு
செய்வது எப்போது……

அன்பும் பண்பும்
ஆய்ந்தே உலகில்
நட்பை வளர்த்திட
நாமும் முயன்றிடுவோம்
பொல்லாத மனிதர்களின்
செல்லாத கருத்துக்களை
பொய்யாய் ஆக்கியே
மெய்யை நிலைநாட்டுவோம்……..

எழுதியவர் : கவி.செங்குட்டுவன் (19-Apr-20, 1:43 pm)
பார்வை : 83

மேலே