எரிதழல்கொண்டுவா……
ஊரெல்லாம் உறக்கம் இன்றியே
இரவெல்லாம் கழிக்கும் போக்கு
நாடெல்லாம் அமைதி இழந்தே
நாடகம் ஆடிடும் நிலையிங்கே……..
வீடுதோறும் விதியின் விளையாட்டாய்
விபரீத நிகழ்வுகளின் சங்கமம்
நாளும் நிகழ்ந்தே இன்று
சிதையும் குடும்ப உறவுகள்………
எங்கும் அதிகார அவலம்
அதிகமாக அரங்கேற்றம் ஆவதாலே
அல்லல் படும் மக்களின்
கூக்குரல் காதைத் துளைக்கிறது…….
பொருளாதார சீராக்கல் என்னும்
பொய்யான தோற்றம் கண்டு
பொசுங்கும் சாதாரன மக்கள்
படும் அவலங்கள் ஏராளம்……..
அல்லல் படுவோர் அப்படியே
அலைந்து கொண்டு இருக்கையிலே
தொல்லை கொடுத்தோர் எல்லாம்
தொலைந்தே போனார்கள் போலும்…..
மக்களின் துயரைத் துடைத்திட
மாபெரும் உருவம் எடுத்தே
மறக்காமல் வந்திடு இறைவா
எரிதழல் கொண்டு எரித்திடவே……..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
