உனை சந்தித்த கணம்

நான் உனைத் தேடி வரும்போதெல்லாம்
உன் ஆழ்ந்த உறக்கத்தை கலைத்திருக்கிறேன்

கலைந்த மேகத்தைப்போல்
கலைந்த தூக்கம்
மீண்டும் கூடுவது எளிதல்ல

என் இதயத்தில்
நீ ஆழ்ந்து அமைதியாக உறங்குகிறாய்
எந்நேரமும் எந்த தடங்கலும் இல்லாமல்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (21-Apr-20, 4:56 am)
பார்வை : 417

மேலே