இனியவளே

இடிமின்னல் மழையுடன்
இவளின் தேசம்
இது தானோ என்றென்றும்
இவளின் நேசம்
இமைக்காமல் பார்த்திருக்க
இறைவனையன்றி யாரடி
இனி நீயும் சகித்திருக்க
இன்னல்கள் ஏதடி
இறுமாப்பு கொள்ளு நீ
இனிய சகோதரி
இளையவள் நானும்
இப்பொழுதும் உன் மடி
இனியநாட்கள் நினைவிலும்
இனிவரும்நாட்கள் நனவிலும்
இனிதே செல்லுமடி
இன்னா நாற்பது தான்
இனி என் செய்வது
இதுவும் கடந்து போகும்
இதனால் ஆகுமென்று
இட்டுக்கட்டும் நெஞ்சமல்ல
இடையூறு வந்தாலும்
இனிதே நடைபோடும்
இளநெஞ்சம் நம்மோடு
இனி என்னபெண்ணே
இமயம் காலடி
இனிதே வாழடி...வாழையாய்.

எழுதியவர் : (21-Apr-20, 9:00 pm)
சேர்த்தது : krishna viji
Tanglish : iniyavalae
பார்வை : 347

மேலே