திருவாரூர்ச் சின்னங்கள்
திருவாரூர்ப் பெரிய கோயிலின் முக்கியமான சின்னங்களை குறிக்கும் செய்யுள் இது,
நேரிசை வெண்பா
சங்குதீர்த் தந்திருச் சாளரவா யில்வீர
சிங்காச னந்திருவந் திக்காப்புப் - பங்குனிமா
தத்திருநா டீர்த்தந் திருவினா தன்கோயில்
உத்திரபா கந்திருவா ரூர். 88
- கவி காளமேகம்
பொருளுரை:
சங்கு தீர்த்தம், திருச்சாளர வாயில், வீர சிங்காசனம் திருவந்திக்காப்பு, பங்குனி மாதத் திருநாள், திருவின் தீர்த்தம், உத்தரபாகம், நாதன் கோயில், இவை திருவாரூர்ச் சிறப்புகள்.
திருச்சாளர வாயில் - தியாகர் திருமுன்பே இருக்கும் பலகணிவாயில்.
வீர சிங்காசனம் - தியாகர் வீற்றிருப்பது; திருவந்திக் காப்பு - மாலை வேளையிற் சார்த்தும் திருக் காப்பு;
பங்குனிமாதத் திருநாள் - திருவுத்திரத் திருநாள். திருவின் தீர்த்தம் - கமலாலயம் என்னும் திருக்குளத்துத் தீர்த்தம்.