ஏன் தாயே இந்த ஓர வஞ்சனை?

ஏன் தாயே இந்த ஓர வஞ்சனை?

என் அன்னையே...
பாரத மாதா....
இன்னும் நீ
எத்தனை நாள் தான்
உறங்கிக்கொண்டு இருப்பாய்?
போலியை கண்டு நீ
மயங்கி போய் கிடக்குராயே...
வீறு கொண்டு
எழுவது தான் எப்போது?
அரசியல் வாதிகளின் பிடியில்
சிக்குண்டு தவிக்கிறாயா?
உன் மூத்த பிள்ளை தமிழும்
அப்படி தான் இருக்கிறாள்.
அவளுக்கு பிறந்த
ஒன்னரை லட்சம் குழந்தைகளை
யாருக்கோ பிறந்த ராஜபட்சே
கொன்று குவித்த போது
உன் கண்ணில் நீர்
வராமல் போனது ஏன்?
வட நாட்டுப் பிள்ளைகள்
என்றால் தான் உனக்கு பிரியமோ?
ஏன் தாயே இந்த ஓர வஞ்சனை?

எழுதியவர் : ரோஹித்கணேஷ் (16-Sep-11, 3:35 pm)
பார்வை : 338

மேலே