இருகுறள் நேரிசை வெண்பா
குறட்பாக்கள்
உடன்பிறந்தார் ஆனாலும் ஒப்பாகார் கோளை
உடன்கொண்ட போழ்தே உனக்கு. 1
கோளர்கள் என்றுங் குடிகெடுப்பர் என்றதனால்
கேளிராய்ச் சேர்க்காதே கேள். 2
இருகுறள் நேரிசை வெண்பா
உடன்பிறந்தார் ஆனாலும் ஒப்பாகார் கோளை
உடன்கொண்ட போழ்தே உனக்கு. - தடந்தோளாய்!
கோளர்கள் என்றுங் குடிகெடுப்பர் என்றதனால்
கேளிராய்ச் சேர்க்காதே கேள். - வ.க.கன்னியப்பன்
குறட்பாக்கள்
புல்லர் பொருட்பெறினும் பொல்லாங்கு செய்திருந்தே
எல்லா இடர்தருவர் இங்கு. 1
உற்ற உனையே உறுதியாய் நம்பிநின்றால்
சற்றுந் துயரில்லை சாற்று. 2
ஈராசு இடையிட்ட நேரிசை வெண்பா
புல்லர் பொருட்பெறினும் பொல்லாங்கு செய்திருந்தே
எல்லா இடர்தருவர் இங்கதனால் - நல்லணங்கே!
உற்ற உனையே உறுதியாய் நம்பிநின்றால்
சற்றுந் துயரில்லை சாற்று. - வ.க.கன்னியப்பன்