ஜோதிகா அம்மையாரின் கருத்தில் அர்த்தம் உள்ளது
எங்கு பார்த்தாலும் ஜோதிகா அவர் தெரிவித்த கருத்தில் பிழை உள்ளது என்று தேவையில்லாமல் கண்டனம் தெரிவிக்கிறார்கள் பெரியோர்களே அப்படிப்பட்டவர்களுக்கு சிறியவன் பணிவான வேண்டுகோள் கோவிலூர் கிராமத்தில் வளர்ந்தவன் சிறிது அனுபவம் உள்ளது என்ற முறையில் சொல்கிறேன் தயவுசெய்து தங்கள் அருகில் உள்ள கிராமத்தை போய் சுற்றிப் பாருங்கள் எவ்வளவு சுகாதாரமற்ற இருக்கிறார்கள் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் நோய்
நொடிகளில் அல்லல்பட்டு போதிய மருத்துவ வசதி இல்லாமல் இருந்தாலும் அலைக்கழிக்க படுகிறார்கள் தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் தன் குடும்பத்தையும் காப்பாற்றி கொள்ள முடியாமல் பசியால் பொருளாதாரப் பின்னடைவால் சாதிய வன்கொடுமைகள் ஆல் (சாதிய வன்கொடுமை இல்லை என்று சொல்லாதீர்கள் என்னால் ஆதாரத்தோடு சில இடத்தில் நடக்கிறது என்று நிரூபித்துக் காட்ட முடியும்) அடக்குமுறைகளால் சொல்லவொண்ணா சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறான் எவ்வளவு பக்கம் எழுதினாலும் அவர்களின் துயரத்தை சொல்ல முடியாது அய்யா மனிதன் என்பவன் தன்னறிவு பெற்று ஒழுக்கமாக எல்லா விதமான சுகத்தையும் அனுபவித்து எல்லோருக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து பரம்பொருளின் நிலையை அடைய வேண்டும் எல்லோரும் அதற்கு தான் பிறந்திருக்கிறோம் அதற்கு தான் கல்வி தமிழர்களாகிய நாம் பண்பாட்டிலும் கலாசாரத்திலும் சிறந்து விளங்கி உள்ளோம் ஆனால் இன்னும் தன்னறிவு பெறவில்லை சில குறிப்பிட்ட பகுதியினர் அவர்களுக்கு உதவ வேண்டியது நம் கடமை அல்லவா பெரியோர்களே நீங்கள் படித்தவர்கள் சுயநலம் பரிணாம வளர்ச்சியை வளர்த்துக் கொள்ளாதீர்கள் படிப்பு இல்லாதவர் பண்போடு இருக்கிறார்கள் இந்த மாதிரி நிறைய அடிப்படை வசதிகள் இல்லாமல் அல்லல்படுகிறார்கள் சில கிராமங்கள் முன்னேறிக்கொண்டு பரிணாம வளர்ச்சி அடைகின்றன ஒத்துக்கொள்கிறேன். என்னால் விவரித்துக் கூற முடியவில்லை ஞாபகம் இல்லை நிறைய விஷயங்கள் ஏனென்றால் மனச்சிதைவு நோய் மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா எல்லா மதமும் சமூக கொள்கைகளில் பரந்து விரிந்துள்ளது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது அந்த மதம் தான் உங்கள் வருமானத்தில் செலவு போக மீதி உதிரி பாகத்தை சமுதாயத்தில் இல்லாதவர்களுக்கு பங்கிட்டுக் கொடு என்று முக்கியமாக அழுத்தந்திருத்தமாக இந்துமதம் சொல்கிறது இதைத் தேடி படிக்காததால் ஒரு சில குழுக்கள் தனக்கு தானம் பண்ணால் புண்ணியம் என்று திரித்துக் எழுதி இல்லாமல் காலட்சேபம் செய்தார்கள் தப்புதான் தமிழர்களின் கோவிலை மையப்படுத்தி கூறியதால் பெரியோர்களே நமது பாரம்பரியத்தையும் கோவில்களையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் ஒத்துக்கொள்கிறேன் நம் இந்தியா மதச்சார்பற்ற நாடு எல்லோருக்கும் சமய சுதந்திரத்தை வழங்கியுள்ளது ஆதலால் ஆன்மிகத்தை தகுந்த ஆசாரியன் மூலமாக வளர்த்துக்கொள்ளுங்கள் பிறகு தானாக பற்று வரவும் அப்புறம் அரசாங்கம் நீங்களும் சேர்ந்து பாதுகாத்துக் கொண்டு போங்க அதற்கும் ஒற்றுமையாக இருந்து நிதிவசதி பெருகி பாதுகாத்துக் கொள்ளுங்கள் கையெடுத்து கும்பிடுறேன் இயலாதோருக்கு செய்யுங்கள் உங்களால் முடிந்ததை இல்லையென்றால் பிரார்த்தனை செய்து தடுக்காமல் ஒதுங்கி இருங்கள் அகரம் பவுண்டேஷன் போல் பல தொண்டு நிறுவனங்கள் உள்ளன இப்படிப்பட்டருக்காக தேடிப்போய் மற்றும் தேடி வருபவர்களுக்கு சேவை செய்வதற்காக அரசாங்கத்தால் எவ்ளோ பேரு தான் செய்ய முடியும் என்று யோசித்துப் பாருங்கள் ஆதலால் அவர்களின் தொண்டையும் அவர்களின் கருத்தையும் தடுக்காதீர்கள் கொச்சை படுத்தாதீர்கள் உங்களால் முடியவில்லை கசக்கிறது என்றால் பேசாமல் இருங்கள் மன்னித்துக் கொள்ளுங்கள் புண்படும்படி பேசியிருந்தால் நான் சூர்யா ஜோதிகா ரசிகனுமில்லை மனிதநேயம் உள்ளவன்