62 பலர்க்கும் விளங்கப் பகுத்து உரைப்போன் ஆசான் - ஞானாசிரியன் பெருமை 9

கலித்துறை

சிறுவாய்க் கலத்துட் டுளியாகச் செலுத்து நீர்போல்
அறியாச் சிறுவர்க்கு முணர்ந்தறி யாத வர்க்கும்
வறியார்க் கும்விளங் கிடவே தெளிவா வகுத்து
நெறியைத் தெரிவிப்பர் நன்னூ னெறிநின்ற மேலோர். 9

- ஞானாசிரியன் பெருமை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”வாய் ஒடுங்கிய பாத்திரத்திற்குள் நீரைத் துளித்துளியாகச் செலுத்துவது போல, கல்வி அறிவில்லாச் சிறுவர்களுக்கும், உணர்ந்து அறியாதவர்களுக்கும், ஏழைகளுக்கும் விளங்கும்படி நன்னெறியை தெளிவாக வகைசெய்து நல்ல நூல்நெறியின் வழி நிற்கும் ஆசான் சொல்லித் தருவார்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

கலம் – பாத்திரம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-May-20, 12:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

சிறந்த கட்டுரைகள்

மேலே