63 நைந்த எல்லார்க்கும் தெய்வமறையின் சிறப்பைக் கூறுபவன் ஆசான் - ஞானாசிரியன் பெருமை 10

கலித்துறை

வைவார்தமை வாழ்த்தியு நெஞ்சில் வருத்த முற்று
நைவாருடன் நைந்தழு துந்தமை நண்ணித் துன்பஞ்
செய்வாருறு பீழை நினைத்துஞ் சிந்தை நொந்து
மெய்மாமறை யின்பய னோதுவர் மேன்மை யோரே. 10

- ஞானாசிரியன் பெருமை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”மெய்யுணர்ந்தவர் தம்மைத் திட்டுபவரை வாழ்த்தியும், உளம் வருந்தித் துன்புறுபவர்களுடன் தாமும் துன்புற்று அழுதும், தம்மை நெருங்கித் துன்பம் செய்வார்க்கு அத்தீவினைப் பயனால் துன்பம் வருமே என்று மனம் நொந்து எல்லார்க்கும் உண்மைத் தெய்வமறையின் சிறப்பை எடுத்துக் கூறுவர்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

நைவார் - துன்புறுவார். பீழை - துன்பம். மேன்மையோர் - மெய்யுணர்ந்தார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-May-20, 3:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

சிறந்த கட்டுரைகள்

மேலே