195 மெய்யே பேசினால் இடர்கள் மேவாது - பொய் 1

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

முன்னமோர் பொய்யுரைக்க வப்பொ(ய்)வெளி யாகாமல்
..மூடும் வண்ணம்
பின்னுமோர் பொய்யுரைக்க வதையுநிலை நிறுத்துவோர்
பெரும்பொய் சொல்ல
இன்னவகை கைதவமொன் றிருநூறு கைதவத்துக்(கு)
..இடமாம் வாய்மை
தன்னையே முன்பகரிற் சங்கடமொன் றிலையதுவே
..தகைமை நெஞ்சே. 1

- பொய்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”முதல் முதலாக ஒரு பொய் சொல்ல நேர, அந்தப் பொய்யை வெளியாகாமல் மூடி மறைக்க மீண்டும் ஒரு பொய் சொல்ல நேரிடுகின்றது.

இதையும் உண்மையென்று நிலைநிறுத்த அவர் இன்னும் பெரிதாகப் பொய் சொல்ல, இத்தகைய பொய்கள் ஒரு நூறு – இரு நூறு பொய்கள் சொல்வதற்கு இடமாகின்றது. உண்மையை மட்டுமே முதலிலேயே சொல்லி விட்டால் எந்தவிதமான சங்கடமும் இல்லை. அதுவே தகுந்த செயலாகும் நெஞ்சே!” என்றும் சொல்கிறார் இப்பாடலாசிரியர்.

கைதவம் - பொய்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-May-20, 4:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே