கொரோனா கவிஞர் இராஇரவி

கொரோனா ! கவிஞர் இரா.இரவி !

பசியின் கொடுமையை
உணர்த்தியது பலருக்கு
கொரோனா !

பயனில்லை வழிபாடு
உணர்த்தியது பக்தர்களுக்கு
கொரோனா !

பணத்தை தங்கத்தை
உண்ணமுடியாது உணர்த்தியது
கொரோனா !

திரும்ப வைத்தது
சொந்த ஊரே சொர்க்கம்
கொரோனா !

வணிக வளாகங்களை விட
வண்டிக்காரர்களே உதவினர்
கொரோனா !

குடி மறந்தனர்
குடி நோயாளிகள் சிலர்
கொரோனா !

வைத்தது ஆப்பு
ஆடம்பர வாழ்ககைக்கு
கொரோனா !

கற்பித்தது எளிமையை
பணக்காரர்களுக்கும்
கொரோனா !

அடித்து நொறுக்கியது
அயல்நாட்டு மோகத்தை
கொரோனா !

மிச்சப்படுத்தியது பெருமளவு
பெட்ரோல் செலவை
கொரோனா !

சேமிக்க வைத்தது
சிகை திருத்தும் செலவை
கொரோனா !

விடாமல் தொற்றியது
மேல் மட்டம் கீழ் மட்டம்
கொரோனா !

ஆழ்த்தியது இன்னலில்
ஏழை மக்களை
கொரோனா !

கண்ணில் விரல் விட்டு ஆட்டியது
கண்களுக்குத் தெரியாமலே
கொரோனா !

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி (5-May-20, 9:22 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 161

மேலே