தெய்வத் திருமகன்

====================
ஆலயத்திற்கு யாரும் வாராத
இந்த கொரோனா காலத்தில்
நீ கை கொடுத்த தெய்வம்
*
செய்யும் தொழிலே தெய்வம்
என்பதற்கேட்ப நடக்க
வழி காட்டிய நீ என்
காவல் தெய்வம்
**
இத்தனை காலம் வணங்கியவர்கள்
எல்லாம் பீதியுடன்
வீட்டில் இருக்கும் சமயத்தில்
என்றைக்குமே உன்னை வணங்கா
எனக்குமட்டும்
கண் திறந்த தெய்வமே
நீயே என் கண் கண்ட தெய்வம்
**
முகமூடியைக் கழட்டிவிட்டு
சிறு முகக் கவசத்தை
அணியவிட்டு
கைரேகை தடயங்கள் படாமலிருக்க
கையுறையும் அணியவிட்டு
காவல் துறையினருக்கு
அல்வா கொடுக்க சந்தர்ப்பத்தையும்
வழங்கிய நீயல்லவா
தெய்வத்தின் தெய்வம் என்றவாறு
கண் மூடிய சிலையைக்
கச்சிதமாய் திருடிச் செல்கிறான்
அந்தத் தெய்வத் திரு(ட்டு)மகன்
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (7-May-20, 11:35 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 49

மேலே