காதல்🌹
காதல் 💥
அடியே கள்ளி அயல் நாடு சென்ற நான் உனை காண ஓடோடி வந்துள்ளேன்.
நம் மண்ணில் கால் பதித்தவுடன் உன்னையே முதலில் காண விரும்புகிறேன்.
காண கிடைக்காத பொக்கிஷமே எங்குள்ளாய்.
வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன் உங்கள் வரவுக்காக.
இரவு நேரம், மண்ணிக்கவும், இப்போது எனை பார்க்க வர வேண்டாமே!
நாளை காலை சந்திக்கலாமா.
காதல் கன்னியே!
உன்னை இப்போதே பார்க்க வேண்டும்.
உள்ளம் உன்னை நினைத்து துடிக்குதடி.
சொன்னால் கேட்க மாட்டீர்களா!
சிறு பிள்ளை போல் பிடிவாதம் ஏன்!
இது பிடிவாதம் அல்ல,
பேராசை என்று கூட சொல்.
அது பற்றி எனக்கு கவலை இல்லை.
இப்போதே உன்னை காண வேண்டும்.
மொட்டை மாடியில் உங்களுக்காக காத்திருப்பேன்.
மேலே ஏறி வருவது உங்கள் திறமை.
எள் என்றால் எண்னெய்யாக நிற்பேன்.
எனக்காக காத்திரு.
நில வான வீதியில்
நடந்து வந்த வென்னிலவே!
உன் வேல் விழியால் என் இதயத்தை தைக்காதே!
தங்கமே! நிலவொளியில் உன் பளபளக்கும் கண்ணம் இரண்டும் மின்னுதடி.
தமிழ் பெண்னே! உன்னை தாவணியில் பார்ப்பது தனி சிறப்பு!
என் கண்களுக்கு விருந்து
இல்லாத இடை கொண்ட என் இனியவளே!
என் அருகில் வா.
வர்ணித்தது போதும்.
நேரம் கடக்கிறது.
காலை காதலை தொடரலாம்...
உன்னை பிரிய மனமில்லை.
பாவை உன்னை பார்த்து கொண்ட இருந்தால் அதுவே எனக்கு போதும்.
பார்த்தது போதும்.
யாராவது நம்மை பார்ப்பதற்குள்,
நிச்சயம் கிளம்பி விடுகிறேன்.
ஒரு விண்ணப்பம்.
என்ன?
உன்..
என்...
முக்கனி சுவை கொண்ட உன் மாதுளம் இதழை
என் இதழ் கொண்டு...
ஆசையை பார்...
அதெல்லாம் இப்போது வேண்டாம்...
ஒரே ஒரு முத்தம் சத்தமில்லாமல்....
வேண்டாம்...
உன் மனம் வேண்டும் என்கிறது.
இல்லை.
உன் கண்கள் சொல்கிறதே...
நீங்கள், பேச்சில் வல்லர்
சரி, உனக்கு விருப்பம் இல்லையென்றால்..
கோபமா...
இல்லை...
என் மேல் கோபம் தானே.
இல்லேவே இல்லை
நாளை சந்திப்போம் .
கண்கள் அவளையே நோக்கியது.
அடேய்! பிரம்மா!
உன் படைப்பின் திறமை அத்தனையும் இவளிடம் சமர்பித்துவிட்டாயா.
என் சொல்வேன்.
இப்படி ஒரு அழகை யாரும் அவர் வாழ் நாளில் பார்த்திருக்க இயலாது.
பண்பாட்டு முறைப்படி
புடவை கட்டிய அவள்
வீதியில் பவனி வரும் அலங்கார தேர் போல் காட்சி அளித்தாள்.
அஞ்னம் தீட்டிய அவள் கண்கள்
அவள் அழகுக்கு அழகு சேர்த்தது.
தேவதையே....
தங்க தேரே...
அதிசயமே....
சிரித்து விட்டாள். முத்துகளை சிந்தினாள்.
கண்களால் ஜாடை சொன்னாள்.
ஆற்றங்கரை ஓரம்
மரத்தடியில்
மெளனமாக நான் அவளுக்காக காத்திருக்க .
ஒடியும் இடை கொண்டு
எனை காண மூச்சிரைக்க ஓடோடி வந்தாள்.
பளிச்சன்ற அவள் முகத்தில்
பணி துளிகளாக வியர்வை முத்துகள்.
அவள் கரம் பற்றி
இடை வளைத்தேன்
இடை மறித்த அவள்
விலகி ஓட முயற்சிக்க
உரிமையில் அவளை கட்டி அனைத்தேன்
முத்தம் கொடுத்தேன்.
"பரிசம் போட விரைவில் என் வீட்டுக்கு வாருங்கள்" என்று சொல்லி சிட்டாக பறந்துவிட்டாள்.
- பாலு.