என் பெண்ணினமே நீ விழித்தெழும் நேரம் இதுவே
என் பெண் இனமே நீ விழித்தெழும்
நேரம் உலகத்தின் இருளை கிழித்து
வெளிச்சத்தை தரும் நாள் இதுவே !
அறியாமையை தகர்த்து அறிவியலால்
வெற்றி கொண்டு கண்ணீர் சிந்துவதை
நிறுத்தி அடிமைத்தனத்தை உடைத்திடு !
அன்புக்கு நீ அடி பணிந்ததுபோல்
சமூகத்தின் வம்புக்கு நீ அடிகொடுத்து
நிமிர்ந்து நில் என் பெண் இனமே !
உன் தலைக்கனத்தை கைவிட்டு விடு
நம்பிக்கையை கையில் எடுத்து விடு
உயர்ந்த இடத்தில் நிலைத்து நின்றிடு !
அதட்டல் மிரட்டல்களுக்கெல்லாம்
செவிசாய்க்காமல் படிப்படியாக நீ
உயர்ந்து நில் உன் படிப்பின் வழியாய் !
ஏற்றத்தாழ்வுகளை, முரண்பாடுகளை
மடக்கிக் கசக்கிச் சுருட்டிப் போட்டிடு
உன்னால் முடியும் என்று நிரூபித்துவிடு !
தன்னடக்கம் நாவடக்கம் இவைகளை
துணையாக எடு உன் நன்மைக்காக
கவலைகளை துடைத்து தூக்கிப்போடு!
ஆணும் பெண்ணும் ஓர் உயிர் என்று
பிறப்பாலும் இறப்பாலும் சமமென்று
புரியவை இந்த ஆனாதிக்க சமூகத்தை !
ஆனாலும் ஆணவத்தால் ஆட்டம் போடாதே
அனைத்தையும் நிறுத்திவிடு பெண்ணே
நாம் கண்ட கனவு பலிக்கட்டும் இன்று !
பாரதி கண்ட புதுமைப்பெண்களாய்
ஆணும் பெண்ணும் சமம் என்று
விழித்தெழும் நாள் இதுவே என் பெண்ணினமே.....
கருங்கல் சேகர்ஜினி