அன்னையர் தினம்
அன்னையர் தினம்
அம்மா என்ற ஒரு சொல்லில்
அடங்கியதாம் அன்பும் பாசமும்
அகமகிழ்ந்து கொடுத்த கருணையும்
அரவணைத்து போக்கிய அச்சங்களும்
ஆசையுடன் அமுதளித்த வாஞ்சையும்
ஆவலுடன் அறிவூட்டிய அச்சொற்களும்
இறுதிவரை இன்பமுடன் காதில் ஒலித்திடும்
ஈசன் இம்மண்ணில் பிறந்ததை நினைவூட்டிடும்
உயிரினும் மேலான தன்னலமில்லா அவ்வன்பை
ஊசியளவும் குறையாமல் எமக்களித்த தாய்மையே
உன்னை இந்நாளில் போற்றிப் புகழ்ந்திடுவோம்