மண்ராணி

கல்ராணி என்று
பெயர் வைக்கிறார் வடக்கே
நாம் மண்ணை நம்பி வாழும
வேளாண்மை செய்யும மாண்பினர்.

உலகத்தவர்க்கே உணவிடும் நாம்
மண்ணைப் பொற்று நாம்
மண்ணின் மைந்தராய் இருப்பதுவே பெருமை
பிள்ளைகளுக்கு பெயர் சூட்டுவதில் மட்டும்
பிறழ்நிலை அடைவது தேவையா?

ஊரோடு ஒத்துவாழ எண்ணி
என்மகளுக்கும் கலப்படப் பெயர்சூட்ட
மிகுந்த அவாக் கொண்டிருந்த நான்
'மண்ராணி' என்று அவளுக்குப் பெயரிட்டேன்.

என்ன பெயரிது என்று கேட்டனர் சிலர்
கல்ராணியை ஸ்வீட் நேம் என்போரே
'மண்ராணி'யானியின் பெயர் ஸ்வீட்நேம் ஆகாதா? சொல்லிப் பாருங்கள் இனிக்கும்.

எழுதியவர் : மலர் (9-May-20, 1:10 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 80

மேலே