கம்பன் கதை
கம்பன் கதை
ஒருசமயம் குலோத்துங்கச் சோழ னும் கம்பரும் தனித்து நகருலாச் சென்றபோது சோழன்
குறுநகைப் புரிந்துள்ளார். உடனே கம்பர் அரசனிடம் குநகைப் புரிந்த காரணம் கேட்டுள்ளார்.
சோழனும் தன்மீது பலதரப்பட்ட மக்களும் பெருஞ்செல்வரும் வீரர்களும் எல்லா மாந்தரும்
பெருமரியாதை வைத்துள்ளதை நினைத்தேன் சிரிப்பு வந்தது என்றாராம். கொஞ்சம்
நேரம் கழித்து சிறிது தூரம் சென்றதும் கம்பன் கலகல வென்று நகைத்தாராம். அதற்கு
மன்னன் கம்பரிடன் நீர் சிரித்த காரணம் என்னவோ சொல்லும் என்று கேட்டாராம்.
அதற்கு கம்பன் தன்மீது பலதரப்பட்ட மக்களும் , பெருஞ்செல்வரும், வீரர்களும்,எல்லா
மாந்தரும் பேரரசன் குலோத்துங்கரும் தன்மீது எவ்வளவு மரியாதை வைத்துள்ளார்கள்
என்று கேட்டேன் பார்த்தவுடனே சிரிப்பு வந்தது சிரித்தேன் என்றாராம். அரசனும்
கம்பன் தன்னை மட்டம் தட்டவே கம்பர் இவ்வாறு சொன்னார் என்று புரிந்து கொண்டு ,
அப்போது பேசாதிருந் தாராம். ஆனால் அரண்மனைக்கு வந்தபின் அவர் சோகத்தைக் கண்ட
தாசி பொன்னி நீங்கள் கவலையை மறவும் நான் கம்பனை மட்டம் தருகிறேன் என்று
சூளுரைத்தாலாம்.
சில நாளில் கம்பன் தாசிவீட்டை கடக்க நேர்ந்தபோது. தாசி பொன்னி அவரை வழிமறித்து
தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று நல்ல உபசரணைகள் செய்து மஞ்சத்தில் உட்கார
வாத்து தாம்பூலம். தந்து ஓலை ஒன்றைத் தந்து அதில் எழ்தி யிருப்பதுபோல கம்பன்
கைப்பட எழுதித் தந்தால் அவருக்கு வெண்டு மளவுக்குப் பொன்வராகன்களைக்
கொடுப்பதாக உறுதி செய்தாளாம். ஓலையை வாங்கிப் பார்த்த கம்பன் சிறிது நேரம் யோசனை
செய்திபின் அவ்வாறே தங்கைப்பட எழுதி கையெழுத்தும் செய்தும் கொடுத்தாராம்.தாசிப்
பொன்னி யும் கம்பனுக்கு வேண்டிய வராகன் களைத் தந்து அனுப்பினாளாம்
மறுநாளே குலோத்துங்க சோழன் அரசவையைக் கூட்டி எல்லோர் முன்னிலையிலும்
கம்பன் தாசிக்குக் கொடுத்த ஓலையைக் காட்டி இது யாருடைய கையெழுத்து என்று
கேட்டதும் கம்பன் என்னுடையது என்றாராம். உடனே அரசன் ஓலையை வாசிக்க என்றதும்
கம்பர் படித்தாராம். அதில் பொன்னி தாசிக்கு இந்தக் கம்பன் அடிமை என்று எழுதியதை
அது சை உண்மைதான் அதிகம் ஒத்துக்கொண்டா்ராம்.
சோழன் கம்பனிடம் நீர் இப்படி பொன்னி தாசிக்கு கம்பன் அடிமை என்று எழுதித் தந்தத
எதற்கு யிது சோழ நாட்டிற்கே அவமானம் என்று கண்டித்து பதில் கூறும்படி
சொல்லியுள்ளார். கம்பனோ நான் தாசிப் பொன்னிக்கு அடிமதான் நான் எழுதியதில் தவறு இல்லை என்று சாதித்து விளக்கம் சொன்னாராம்
தாய் என்பதில் ய் என்பது தொகுத்தலில்! விகாரப்பட்டது. இலக்குமி என்பதை சி,.(.ஸ்ரீ.) என்று
குறுக்கி சொல்வார்கள் ஆதலின் சி குருக்கள் விகாரமாம் பொன்னி காவிரி நதிக்கு இன்னொரு
பெயராகும். கு என்பது நான்காம் வேற்றுமையில் உருபிடைச்சொல் ஆகும் . ஆக நான்
இந்த ஒலையில் எழுதியிருப்பது. தாய் லட்சுமிக்கு கம்பன் அடிமை என்றுதானே எழுதி யுள்ளேன்
அது எவ்வாறு குற்றமாகும் என்றாராம்.
இதைக் கேட்ட குலோத்துங்க சோழன் கோபம் கொண்டு கீழ்க்கண்ட பாடலைப்
பாடி நாடு கடத்தினாராம்,::
போற்றினும் போற்றுவர் பொருள்கொ டாவிடில்
தூற்றினும் தூற்றுவர் சொன்ன சொற்களை
மாற்றினு மாற்றுவர் வன்க ணாளர்கள்
கூற்றினும் பாவலர் கொடிய ராவரே