மண் ஏற்றம் அடைந்திடத்தான் வேண்டும்

#மண் #ஏற்றம் #அடைந்திடத்தான் #வேண்டும்
****************************************************

மடமண்ணே என்று மறந்தே போனாலும்
மண் ஏற்றம் மனதோரம் வேண்டும்
மல்லிகையாய் வளர்ந்து மனம் வீசினால்
பலநூறு ஆண்டுகள் பாசமாய் வளந்துவிடும்
பணம் ஆயிரம் பாடுகளை தந்தாலும்
பாசமழை இல்லையென்றால் பரிதவித்தே போகும்
பண்பான மண்ணும் பந்தமான வளமும்
பிடிக்காமலே போனாலே பிடித்த மண்ணும்
தேர்வு கொள்ளாமலே தேய்ந்தே போகும்
தேடல் கொள் தேனான மண்மீதும்
இறுதி காலத்தில் இறுக்கி கைப்பிடிக்கும்
இருக்கும் மண்ணின் இளமையை இழந்து
இல்லையென்று தினமும் இறந்து கொள்ளாதே
மண் ஏற்றம் மனதோரம் வேண்டும்
மலரின் வளம் மல்லிகையாய் உயரனும்
அகிலன் ராஜா கனடா

எழுதியவர் : அகிலன் ராஜா (12-May-20, 6:01 am)
பார்வை : 63

மேலே