நகைச்சுவை துணுக்குகள்

என்னங்க எப்பப் பாத்தாலும் தூங்கி வழிஞ்சிக்கிட்டு இருப்பானே. அந்தப் பையன் இப்ப என்ன பண்றான்?

அவனா? அவன் இப்போ படுக்கை, மெத்தை கடை (Bed Emporium) வெச்சி ஓஹோன்னு வியாபாரம் பண்ணிக்கிட்டு இருக்கான்.
********************
ஊர்லே போலி டாக்டர்கள் ஜாஸ்தி ஆயிட்டாங்க. அதனாலே நாம ஒரு டாக்டரைப் பார்க்கப் போறதுக்கு முன்னாடி நூறு தரம் யோசிக்கணும்.


அசல் டாக்டர்களைப் பார்க்கிறதுக்கு முன்னாடி இருநூறு தரம் யோசிக்கணும் அவங்க போடற பில் நமக்குக் கட்டுபடியாகுமான்னு.
*************
யாருக்கு ஓட்டுப் போடறதுன்னே புரியலைங்க. யாரைப் பாத்தாலும் எனக்கே உங்க ஓட்டைப் போடுங்க, எனக்கே உங்க ஓட்டைப் போடுங்கன்னு கேக்கறாங்க.

பாருங்க, நீங்க யாருக்கு உங்க ஓட்டைப் போட்டாலும், கடைசியிலே அவங்க உங்க வாழ்க்கையிலே பெரிய ஓட்டைதான் போடப் போறாங்க.
****************

என்னடா ரிசல்ட் வந்துடுச்சா? என்னஆச்சு?

ஊரெல்லாம் அமர்க்களப்பட்டுக் கிட்டுஇருக்கு. உங்களுக்குத் தெரியாதா?

தேர்தல் ரிசல்டைக் கேக்கல்லைடா. உன் பரீட்சை ரிசல்டைக் கேட்டேன்.

அதுவா? நான் ஃபெயில்.

அப்படின்னா உங்க அப்பன் உன்னை வாங்கு வாங்குன்னு வாங்கி இருப்பானே.

அதான் இல்லே. நல்ல வேளையா அவருக்கு இந்த எலக்ஷன்லே டெபாஸிட் போயிட்டதாலே என்னை அவர் ஒண்ணும் சொல்லல்லே.
********

எழுதியவர் : ரா. குருசுவாமி(ராகு) (14-May-20, 1:24 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 56

சிறந்த நகைச்சுவைகள்

மேலே