தகப்பன்
ஏழை தெய்வம் 
================
வெட்டுகின்ற மின்னலுக்கு விழியை மூடி 
-வீட்டுக்குள் முடங்குகின்ற விதியைச் சொல்லி    
எட்டுதிக்கும் முழங்குகின்ற இடியைக் கேட்கா 
=திருக்கும்படி அறிவுரைகள் எல்லாம் கூறிக்    
கொட்டுகின்ற பெருமழைக்குக் குடையு மற்றுக் 
-குழந்தைகள் பசிபோக்கிக் கொள்ள வென்று 
இட்டமொடு தொழிலாலே இன்னல் போக்க  
எதிர்நீச்ச லிடுந்தகப்பன் ஏழை தெய்வம் 
**
மெய்யன் நடராஜ்
 
                    
