வாழ்ந்து கெட்டவன்

வாழ்ந்து கெட்டவன்.

வாழ்க்கையை வெல்ல பல முயற்சிகள் செய்தார்.
அடிப்படையில் எல்லோரும் சுதந்திரமாகவே வாழ விரும்புபவர்.
ஆனால், நான் ஒரு வாழ்நாள் சுதந்திர பறவை
என்று அவர் என்னியதால்
அவர் வாழ்க்கையில் எடுத்து சில முக்கிய முடிவுகள் பிற்காலத்தில் அவருக்கு சாதகமாக அமையாமல் பாதகமாக போனது.
அவர் போட்ட கனக்கு
முதல் முறை தவறாக போனது.
தவறை திருத்தி மீண்டும் அவர் வாழ்க்கையில் எழ முயற்சிதார்.
பட்ட காலில் படும், கெட்ட குடியே கெடும்.
அவர் பெரியதாக நம்பிய
யாரும் அதில் இருந்து மீள அவருக்கு கைகொடுக்கவில்லை.
தவறை சுட்டிகாட்டிய
சொந்தங்கள்
அதற்கான தீர்வை வழங்காமல்
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது.

சோகம், இதை கடப்பது அவ்வளவு எளிதல்ல.

கைநிறைய பணம் பார்த்தவர்
பணம் அவரை விட்டு விலகி செல்லும் போது
விரக்தியின் விளிம்பில் விழுந்தவர்
விட்டில் பூச்சியாக மாறினார்.
வாழ்க்கையை தொலைத்து விட்டதாக என்னி வாழ்ந்து கெட்டவர்கள் பட்டியலில் தன்னை இனைத்து கொண்டார்.
வாரிசு வசந்தமான வாழ்க்கையை வழங்கிய போதும் முழுமனதுடன்
ஏற்கவில்லை.
தன் மரத்தில் இளநீர் குடித்தவர்கள்
மற்றவர் மரதடியில் இளநீர் அல்ல கள்ளும் குடிக்க தயங்குவார்கள்.
எல்லாம் தெரிந்த ஞானியாக இருந்தும்
எதார்த்ததை உணராமல்
வரட்டு பிடிவாதமாக
கால் போண போக்கில், மணம் போன போக்கில்
நடந்த அவர் கால்கள்
ஒரு நாள் தளர்ந்தது.
ஒரு நாள் நிசப்தமானது.

வானத்தில் வானம்பாடியாக.... இலக்கு தெரியாமல் சுதந்திரமாக பறந்து பறவை திடிரென மாயமானது.

நதி அது ஒரு இடத்தில் நிற்காது.
ஆனால் அது பல பேருக்கு நன்மை செய்யும்.
பறவைக்கு ஏது நிரந்திர கூடு.
பின் அது சிறகடித்து தானே பறக்கும்.
ஆனால் அது பழம் தின்ற பிறகு கொட்டையை தெளித்த விட்டு பறக்கும்.
அது போட்ட விதை தான்
பல வானுயர்ந்த மரங்களாக வளர்ந்து நிற்கிறது.
தெளிவு பலருக்கு தரும் சூரியன்
ஏன் தினம் கடலில் இறங்குகிறது.
தெரியவில்லை.
அமாவாசையும், பெளர்ணமியும் ஏன் மாறி, மாறி வருகிறது.
பல விஞ்ஞான காரணங்கள் கூறினாலும்
உண்மையான காரணம் தெரியாது.

அவர் இப்படி செய்தார்
அதனால் தான் அவருக்கு....
அவர் அப்படி செய்து இருக்க கூடாது
அதனால் தான் அவருக்கு அந்த நிலைமை....
எப்போதுமே சொந்தம், சமூகம்,
வாழ்ந்தால் வாழ்த்தி பண்ணீர் தெளிக்கும்.
நொடிந்துவிட்டால் போதுமே
சேர் வாரி இறைக்கும்.
மாறாக தீர்வு தராது.
ஈரை பேனாக்கி பேனை பெருமாள் ஆக்கிவிடும்.

தவறு செய்யாத மனிதன் யார்.
சிலர் செய்யும் தவறு மறைக்கப்படுகிறது.
சிலர் செய்யும் தவறு மறுக்க படுகிறது.
சிலர் செய்யும் தவறு
வெளிச்சம் போட்டு காண்பிக்க படுகிறது.
நம் சமூகத்தில் தன் குடும்பம், தன் பிள்ளை என்று வீடு கட்டி, பங்களா கட்டி
தான் எதையுமே அனுபவிக்காதவன் மிக சிறப்பானவன்.
இது தான் நம் சமூகம் காலகாலமாக கற்று கொடுத்த போங்காட்டம்.
இதில் இருந்து கொஞ்சம் தடம் புரண்டவர்கள் விதி வசத்தால் அல்ல, பணபலத்தால் தன்னை நிலைநிறுத்தி நல்லவர்களாக காட்டிகொள்கிறார்கள்.
பணம் இல்லாதவன் பல ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிறான்.

மனிதா! நீ வாழ்க்கையை எந்த நிலையிலும் தக்க வைக்க உன் பலம் எது பலவீனம் எது என்று தினம் ஆராய வேண்டும்.
தவறினால் தடுமாற்றம் தான்.
விதி, அது பிறகு தான்.
- பாலு.

எழுதியவர் : பாலு (17-May-20, 4:40 pm)
சேர்த்தது : balu
பார்வை : 366

மேலே