என் குளத்தில் கல் எறிந்தவள்

என் குளத்தில் கல் எறிந்தவள்.

அவள் நினைவு எனக்கு எப்போதுமே கண்ணனின் ஊது குழல்.
அவளின் ஆத்மார்த்தமான பேச்சு எப்போதுமே எனக்கு ஆத்ம ராகம்.
அவளின் அழகு முகம் எப்போதுமே எனக்கு பெளர்ணமி நிலவு.
அவளின் அமைதி எப்போதும் எனக்கு புத்தம்.

நான் விரும்பிய கிராமத்து மலர்.
ரவிக்கை அனியாத அவள் ஒரு கிராமத்து தேவதை.
கண்டாங்கி சேலை கட்டி
காலிலே தண்டை அனிந்து
கூடையை இல்லாத இடையில் சுமந்து அவள் நடந்து வரும் அழகு
இருக்கே
அற்புதம், இப்போது நினைத்தாலும் புல்லரிக்கும்.
மனம் ஆனந்த கூத்தாடும்.
அவள் கண்கைள கண்ட பிறகு காதலிக்கவில்லை என்றால் அவன் ஆண் மகனே அல்ல.
அவள் சங்க இலக்கியத்தில் வரும் தலைவியின் ரகம்.
அவள் நிறம் கருப்பாக இருந்தாலும்
அவள் பளபளக்கும் மேனி கண்களை கொள்ள அடிக்கும்
அவள் இளமையின் இன்ப சுரங்கம்.
அவள வாலிபத்தின் வசந்த மண்டபம்
சோலைவனத்தில் தோகை விரித்தாடும் அழகு மயில்.

பார்வை, பழக்கமாக அதுவே
காதலாக அரும்பியது.
உனக்கு நான்!
எனக்கு நீ!
காதல் வசனங்கள் பேசபட்டது.
காதல் கொண்ட நாங்கள்
காமத்துக்கு தயார் ஆனோம்.
இமயம் அளவுக்கு என்னை நம்பி தன்னையே எனக்கு தாரைவார்தாள்
அந்த பத்தினி தெய்வம்.

ஏன் அவளை பிரிந்தேன்.
ஏன் அவளை ஏமாற்றினேன்.
விதி செய்த சதியா.
அல்லது விதியின் மேல் நான் போடும் பழியா.
நான் செய்த துரோகம்
மன்னிக்க முடியாதது.
அதற்கு பிராயசித்தமாக
பல முறை நான் இதயத்தை ஈட்டியால் குத்தி கொண்டேன்.
யாராவது சொன்னால் நம்புவார்களா.
இதோ மரண படுக்கையில் இருக்கும் எனக்கு
அவள் மன்னிப்பு தருவாளா.
எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன்.
கண்ணாடி முன் நின்று பல முறை நான் காரி துப்புவேன்.
நீயெல்லாம் ஒரு மனிதனா என்று.
அடுத்த ஜென்மத்தில் நான் நீயாக பிறக்க, என்னை நீ ஏமாற்று.
என் தேவதையே... என்னை......மன்னி..

- பாலு.

எழுதியவர் : பாலு (17-May-20, 5:44 pm)
சேர்த்தது : balu
பார்வை : 164

மேலே