எல்லாம் மறந்தேன் உன்னை தவிர

என்னவனே !
கருவறையில் பார்க்காத வெளிச்சத்தை தரும்
உன் கண்விழி !
நீ பார்த்த மறுநொடி
மனத்திற்குள் சென்று
விதைத்து விட்டாய் காதல் செடி !
என்னவனே !
கருமையான மேகம் உன் கூந்தல் !
மழைக்கு முன் வரும் காற்று
நீ தரும் சுவாசம் !
இடிஇடிக்கும் சத்தம்
உன் கோபத்தின் உச்சக்கட்டம் !
இதற்கிடையில் வரும் மின்னலின் வேகம் உன் வெட்கம் !
சலசலவென வந்து மரத்தை பல துளிகளாக நனைக்கும் மழைத்துளி உன் வார்த்தைகள் !
விழும் சிறுதூறல்கள்
உன் வியர்வைத் துளி !
இரவில் பொழியும் பனித்துளி
உன் மௌனத்தின் மறுமொழி !
என்னவனே !
உன்னை நினைத்து எழில்கொஞ்சம் இயற்கையை மறந்தேன் :
மழை என் மீது விழுவதை மறந்தேன்!
உணவருந்துவதை மறந்தேன் !
எல்லாம் மறந்தேன் :
"உன் நினைவு ஒற்றை தவிர "
என்னவனே !
உன் நினைவால் வாடும்
இப்பேதையின் மனத்தை நீ அறிவாயா என் கள்வனே !......

எழுதியவர் : Poomani (17-May-20, 4:43 pm)
சேர்த்தது : பூமணி
பார்வை : 471

மேலே