நகைச்சுவை துணுக்குகள்

பஞ்சர் கடி
பஞ்சர் ஒட்டற இடம் எங்கே இருக்குங்க?
ட்யூப்பிலே எங்கே பொத்தல் விழுந்திருக்குதோ அதுதான் பஞ்சர் ஒட்டற இடம்.
****************
நீங்க நினைச்சுப் பாருங்க. இப்ப நீங்க இருக்கிற அறை தீப்பிடித்துக் கொண்டால் எப்படித் தப்பிப்பீர்கள்?
நினைச்சிப் பார்க்கிறதை உடனே நிறுத்திவிடுவேன்.,
**************
டாஸ்மாக் குடிமகன்
மூன்று குடிமகன்கள் ஒரு டாக்ஸியில் ஏறினார்கள். உடனே டாக்ஸி டிரைவர் இஞ்சினை ஆன் செய்து கொஞ்ச நேரம் ஓடவிட்டு, சற்று நேரத்தில் இஞ்சினை ஆஃப் செய்துவிட்டு,
"உங்கள் இடம் வந்துவிட்டது. இறங்குங்க" என்றான்.
முதல் குடிமகன் பணத்தைக் கொடுத்து விட்டுக் கீழே இறங்கினான்.
இரண்டாவது குடிமகனும் அவ்வாறே செய்தான்.
மூன்றாவது குடிமகனை இறங்கச்சொன்ன போது அவன் டிரைவரை ஓங்கி ஒரு அறை அறைந்தான். ஒரு நிமிடம் தடுமாறிய டிரைவர், ஒருவேளை இவன் நிதானத்துக்கு வந்து, தான் செய்த ஏமாத்து வேலையைக் கண்டு பிடித்துவிட்டானோ என்று பயந்து
"ஏன், என்னை அடித்தாய்" என்று கேட்டான்?
அதற்கு அந்த மூன்றாம் குடிமகன்
"ஏன் இவ்வளவு வேகமாக ஓட்டினாய்? அதுக்குத்தான் அடித்தேன். இனிமேல்
ஜாக்கிரதையா ஓட்டு" என்றான்
**************
சார், எட்டாம் கிளாஸ் படிக்கிற இந்தப் பள்ளி மாணவி குடிச்சி மயக்கமா விழுந்திடுச்சு.
ஏம்மா, எத்தனை நாளா உனக்கு இந்தப் பழக்கம்?
3ம் கிளாஸிலிருந்து சார்.
உன் பேரென்ன?
மது ரம் சார்
இன்னொண்ணு கவனிச்சீங்களா? பொண்ணு 3ம் classன்னு சொல்றதுக்குப் பதிலா, 3ம் glassன்னு சொல்லுது.
**************
ஆசிரியர்: வாழைப் பழம் சொல்லு.
பையன்: வாயைப் பயம்.
ஆசிரியர்: : தப்பு. வாழைப் பழம்.
பையன்: வாயைப் பயம்.
ஆசிரியர்: ஊஹூம். உங்க அம்மாவைக் கூட்டிக்கிட்டி வா.
பையன்: சரி, டீச்சர்.
(பையனின் அம்மா வருகிறார்)
ஆசிரியர்: நீங்கதான் இவனோடே அம்மாவா?வாழைப் பழம்னு சொல்லச் சொன்னா வாயைப் பயம்னு சொல்லுறான் உங்க பையன். திருத்தக்கூடாதா?
பை. அம்மா: நல்லாத் தானே சொல்லுறான் வாயைப் பயம்னு.
ஆசிரியர்: இல்லேம்மா. அது தப்பு. வாழைப் பழம். அதுதான் சரி.
பை. அம்மா: அப்படிச் சொல்லி எங்களுக்குப் பயக்கமில்லீங்க.
ஆசிரியர்: சரி. உங்க புருஷனை வரச்சொல்லுங்க.
பை. அம்மா: சரிங்க.
(பையனின் அப்பா வருகிறார்)
ஆசிரியர்: நீங்க தான் இந்தக் குழந்தையோட அப்பாவா?
பை. அப்பா: ஆமாங்க. நான்தான் இந்தக் கொயந்தேயோட அப்பன்.
ஆசிரியர்: என்னங்க? உங்க வீட்டிலே யாருக்குமே ழ வராதா?
பை. அப்பா: எங்க வீட்டுக் கெயவிக்கு வரும்.
ஆசிரியர்: சரி. அவங்களை என்னைப் பாக்க வரச் சொல்லுங்க.
(பையனின் பாட்டி வருகிறார்)
ஆசிரியர்: என்னம்மா, நீங்கதான் இந்தக் குழந்தையோட பாட்டியா? இந்தக் குழந்தைக்கு ழ வே வரமாட்டேங்குதே.
கிழவி: அழுக்குத்தான் ழூப்பிட்டீகளா? ழான் எழ்ணமோ ஏழோன்னு பழந்துட்டேழ்.
ஆசிரியர்: வெத்தலையை துப்பிட்டுப் பேசுங்க.
கிழவி: வெழ்த்தழைய அழ்ப்பவே வெழியே துழ்ப்பிழ்டுத்தான் நான் உழ்ழேயே வழ்தேழ்.
**************

எழுதியவர் : ரா.குருசுவாமி( ராகு) (18-May-20, 7:46 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 58

மேலே