நகைச்சுவை துணுக்குகள்

செய்யும் தொழிலே தெய்வம். அந்தத் திறமைதான் எனது செல்வம்னு சொல்லிக்கிட்டு இருக்காரே. அவர் அப்படி என்ன தொழில் செய்யறாரு?

உஷ். பலமாப் பேசாதீங்க. அவர் இந்த ஏரியாவிலேயே சூப்பர் பிக் பாக்கெட்.
********************
சட்டம்னா
நீங்க போன வருஷம் உயிரோடு இருந்ததற்கான சான்றிதழை கொடுக்கத் தவறிட்டீங்க. நாங்களும் அதைக் கவனிக்காம உங்களுக்கு பென்ஷன் கொடுத்துட்டோம்.

சார், ஆனால் இந்த வருஷம் நான் உயிரோடே இருப்பதற்கான சான்றிதழை கொடுக்க நேராவே வந்திருக்கேனே சார்.

அதையெல்லாம் நீங்க போன வருஷம் உயிரோடு இருந்திருக்கீங்கறதுக்கு சாட்சியமா ஏத்துக்க முடியாது. சட்டம்னா சட்டம்தான்.அதுக்கான போன வருஷ சாட்சியத்தைத் தந்தாலொழிய உங்களுக்கு இந்த வருஷம் பென்ஷன் தர முடியாது.
********************
அப்பா: டேய் நீ உன்னோடே ஃபோர்ஃபாதர்ஸைப் பத்தி முதல்லே தெரிஞ்சிக்கணும்.

மகன்: நீங்க ஒரு ஃபாதர் மட்டும்தான் எனக்குத் தெரியும். மிச்சம் மூணு ஃபாதர்ஸைப் பத்தி அம்மா இதுவரையிலும் எதுவுமே எங்கிட்டே சொல்லவே இல்லையே அப்பா.

அம்மா: இதுக்குத்தான் உங்க கிட்டே சொல்றது, தத்துப்பித்துன்னு எதையாவது அவன்கிட்டே உளறி வெக்காதீங்கன்னு. ஃபோர்ஃபாதர்ஸ் என்ன ஃபோர்ஃபாதர்ஸ்? நம்ம முன்னோர்களைப் பத்தின்னு அவன்கிட்டே சொல்லி இருக்கலாமில்லே.
********************
அந்த வீட்டுப் பெரியவர் உடம்பு சரியில்லாம படுத்திருந்தாரே. என்ன ஆனார்?

அந்த வீட்டுலே எல்லாரும் ஆசைப்பட்ட படியே ஆயிடுச்சு.

ஓ? பிழைச்சுட்டாரா?

இல்லை. செத்துட்டார்.

எழுதியவர் : ரா. குருசுவாமி (ராகு) (17-May-20, 11:46 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 46

மேலே