கனவு கண்மணி நீயடி

காதல் கனவுகள் நிறைவேறின
என் கவிதை ஏக்கங்களும் தொலைந்தன
மறுமுறையும் நான் தொலைத்த
பேனாவையும் சொற்களையும்
கண்டெடுக்கிறேன்
காரணம் நீ
கண்கள் காணாத
கைகள் தொடாத
கற்பனைகளில் மட்டுமே
என் மடிகளில் தவழும்
என் கனவு கண்மணியே
மறுபடியும் எழுதுகிறேன் உனக்காக
உன் வருகைக்கு ஏங்கி
காலங்களை கடக்கும் வலிகளோடு :)

எழுதியவர் : பெர்சியா (19-May-20, 3:49 pm)
சேர்த்தது : Persia
பார்வை : 505

மேலே