அம்மா

அம்மா..
வயிற்றின் சுமையை
இறக்கி வைத்தவள்..
இறக்கும் வரை
மனதில் சுமக்கிறாள்..!

தன் வயிறு காய்ந்தாலும்
உனக்காக உணவளிப்பவள்..!
தனக்கு இல்லையே
என்றும் பாராமல்
மிச்சத்தையும் கொடுத்து ரசிப்பவள்..!

நடைபயில சொன்னவள்
அவள்... ... ..
நடை தளர்ந்தாலும்
உன்னை தாங்கிப் பிடிப்பவள்.
உன் விரல் நுனியில்
காயம் பட்டாலும்
தன் நோவு மறந்து துடிப்பவள்..!

உன்னை அழகு செய்து
கொஞ்சியவள்..
தன் அழகைப் பார்க்க
மறந்தவள்..!
தொப்புள் கொடியை அறுத்தாலும்
தொட்டிலில்..
குலவை இசையில்
தூங்க வைப்பவள்..!
நீ கேட்ட
முதல் இசையும் அதுதானே..!

உன்
வயிற்றை நிரப்பியவளை
வயிறெரிய செய்திடாதே..
அவள் தாள்பணிந்து
உன் வாழ்தனை சிறப்பு செய்..!

வாழ்க தாய்...!
வாழிய தாய்மை..!!

எழுதியவர் : தமிழ்தாசன்.கோல சிலாங்கூர (22-May-20, 6:31 pm)
சேர்த்தது : thamilthasan MPSK
Tanglish : amma
பார்வை : 20

மேலே