அம்மாவின் அன்பு

இளம் தென்றலின் ஓசை
மாலை மலரும் மலர்களின் வாசம் !
இனிய கார்த்திகை மாதம்
பனித்துளி விழும் நேரம் !
மண்ணெய் விளக்கின் ஒளி
அறையின் முழுவதும் பரவா நிலை :
கரிய இருள் சூழ்ந்த நேரம்
குழந்தையின் அழுகுரல்..........
தாயின் மனம் பதைபதைக்க
இருண்ட காடுகளின் இடையில் நடக்கிறாள் :
ஒற்றையடி பாதையின் வழியில்
தாயின் முகம்
ஏனோ மாறுதல் அடைய !
மகிழ்ச்சியில் அவள் முகம் மலர !
ஓடுகிறாள்......
ஒளியை மிஞ்சிய நிலவின் ஒளியை
தன் குழந்தையின் முகத்தில் காண !
ஓடுகிறாள்.......
காலில் செருப்பில்லாமல்
கரை புரண்டு ஓடும்
ஓடைத் தண்ணீரைக் கூட கவனிக்காமல் :
தடுக்கி விழும் நேரம்.......
பற்றிக்கொள்கிறது குழந்தையின்
அழுகுரல் :
பாய்ந்து ஓடுகிறாள்........
பல முட்கள் அவள் காலில் குத்துவது கூட தெரியாமல் :
வேதனையிலும் அவள் முகம் மலருகிறது !
அன்று மலர்ந்த தாமரை மலர் போல !
அந்நேரம் :
சூறைக்காற்று வீச மரங்கள் பல சுழல :
அந்த சுழலில் :
அவள் குழந்தையின் முகம் மட்டும் தெரிகிறது !
திடீரென்று !
மின்னல் மின்ன !
எதிரே ஓர் குடிசை வீடு :
வயதான மங்கையொருத்தி
மாலை கறந்த பாலை தருகிறாள் :
விரைக்கிறாள் வீட்டிற்கு :
குழந்தையை காண்கிறாள்
சோர்வில் அயர்ந்து உறங்கிறாள் :
அம்மாவின் சேலையை அணைத்தபடி...... !
"அவளை தடுக்க நினைத்த
இயற்கை கூட தலை வணங்கிறது "!
"அவளின் தாய் அன்பை கண்டு "
வியக்கிறது உலகம் !
"அவளின் தன்னலமற்ற குணத்தை எண்ணி "!.......

எழுதியவர் : பூமணி (23-May-20, 10:09 pm)
சேர்த்தது : பூமணி
Tanglish : ammaavin anbu
பார்வை : 1100

மேலே